Direct Tax: கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் நேரடி வரியானது 24.58 % அதிக வசூல் - மத்திய நிதியமைச்சகம்
2022-23 ஆம் நிதியாண்டில் இதுவரை 14. 71 லட்சம் கோடி நேரடி வரியானது வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேரடி வரி வசூலானது குறித்து, நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 2022 - 23 ஆம் நிதியாண்டில், ஜனவரி 10 ஆம் தேதி வரையில் ரூ.14. 71 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது, கடந்த நிதி ஆண்டை விட 24.58 சதவிகிதம் அதிகமாக விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The provisional figures of #DirectTax collections up to 10th January continue to register steady growth.
— All India Radio News (@airnewsalerts) January 11, 2023
Gross collections are at Rs 14.71 lakh crore which is 24.58% higher than the gross collections for the corresponding period of last year. pic.twitter.com/MJ12Sq0sEX
நிதியாண்டு வசூல்:
ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தை ஒரு நிதியாண்டு என அழைக்கிறோம்.
ஒவ்வொரு நிதியாண்டிலும், நேரடி வருவாயில் குறிப்பிட்ட அளவு நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 வரையிலான காலத்தில் 14. 71 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரியானது வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதியானது கடந்த நிதியாண்டான 2021-22 விடவும் 24. 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட நேரடி வரியில் இதுவரை 86.88 சதவிகிதம் நிதி கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேரடி வரி:
நிறுவன வரி மற்றும் வருமான வரி ஆகியவை நேரடி வரியாக கருதப்படுகிறது. கடந்த நிதியாண்டைவிட நிறுவன வரி வசூலானது 19.72 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், வருமான வரி வசூலானது 30.46 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க: உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் எல்லைப்பகுதியில் முதல் பெண் அதிகாரி.. யார் அவர்?...
தொடர்ந்து படிக்க:Vande Bharat Express: தொடர்ந்து இரண்டாவது நாளாக கல்லால் தாக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்.. நள்ளிரவில் அட்டகாசம்..