Vande Bharat Express: தொடர்ந்து இரண்டாவது நாளாக கல்லால் தாக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்.. நள்ளிரவில் அட்டகாசம்
மேற்கு வங்கத்தில் ஹவுரா முதல் ஜல்பைகுரி வரை செல்லும் வந்தே பாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ஹவுரா முதல் ஜல்பைகுரி வரை செல்லும் வந்தே பாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக, நேற்று ஹவுரா-நியூ ஜல்பைகுரி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டன. ரயில் NJP யார்டுக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
Window pane on C-3 and C-6 coaches of the Howrah - New Jalpaiguri #VandeBharatExpress smashed. Images taken after it arrived at the #Howrah station just a short while back
— ইন্দ্রজিৎ | INDRAJIT (@iindrojit) January 3, 2023
Second consecutive day when such a incident has been reported in #Bengal pic.twitter.com/mAe1uKYrM1
இதற்கு முன்னதாக திங்கட்கிழமை ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரி செல்லும் வந்தே பாரத் எஸ்பிரஸ் ரயிலின் மீது கற்கள் வீசப்பட்டதால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மால்டா ஸ்டேஷன் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வேதனையானது. மால்டா மாவட்டத்தில் இந்தியாவின் பெருமைக்குரிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் NIA யிடம் மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். வங்காளத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் சுமார் 550 கிமீ தூரத்தை கடக்கும் மேலும் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரிக்கு இடையே மூன்று நிறுத்தங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்த ஏழரை மணி நேரத்தில் 550 கிலோ மீட்டர் தூரத்தினை முழுமையாக கடக்கும் . அதே நேரத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது இந்த இரண்டு டெர்மினல்களுக்கு இடையே இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஹவுராவில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு நியூ ஜல்பைகுரியை சென்றடையும். நியூ ஜல்பைகுரியில் இருந்து மாலை 3.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு ஹவுராவை சென்றடையும்.