Direct tax collection: கலெக்ஷன் அமோகம் - கடந்த நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடி நேரடி வரி வசூல் - 17.7% அதிகரிப்பு
Direct tax collection: கடந்த 2023-24 நிதியாண்டில் நேரடி வரியாக 19 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் வசூலாகியுள்ளது.
Direct tax collection: கடந்த 2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் முந்தைய ஆண்டை காட்டிலும் 17.7 சதவிகிதம் அதிகம் ஆகும்.
ரூ.19.58 லட்சம் கோடி வரி வருவாய்:
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மார்ச் 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடியாக நேரடி வரியாக வசூலாகியுள்ளது. அதாவது இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் முந்தைய ஆண்டை காட்டிலும் 17.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது திருத்தப்பட்ட கணிப்புகளையும் விட அதிகமாக உள்ளது. 2024 நிதியாண்டில் வருமானம் மற்றும் கார்ப்பரேஷன் வரிகளின் நிகர வசூல், நேரடி வரிகளின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டதை விட ரூ.1.35 லட்சம் கோடியும், திருத்தப்பட்ட பட்ஜெட்டை விட 13 ஆயிரம் கோடி ரூபாயும் அதிகமாக வசூலாகியுள்ளது.
அதிகரித்த வரி வசூல்:
பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் , 24ஆம் நிதியாண்டில் (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) நேரடி வரி வசூல் இலக்கை ரூ.19.45 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியது. இதன் மூலம், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மொத்த வரி வசூல் இலக்கு 2024 நிதியாண்டில் ரூ.34.37 லட்சம் கோடியாக இருந்தது. FY24க்கான மொத்த நேரடி வரி வசூல் (தற்காலிகமானது) 18.48% உயர்ந்து ரூ.23.37 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து நிகர வருமானம் (ரீஃபண்ட் கணக்கிற்குப் பிறகு) 17.7% உயர்ந்து ரூ.19.58 லட்சம் கோடியாக உள்ளது. இது பொருளாதாரத்தின் மிதப்பு மற்றும் தனிநபர்களின் வருமான அளவுகள் மற்றும் உயர்வை பிரதிபலிக்கிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. FY24க்கான நேரடி வரிகளின் (தற்காலிகமான) மொத்த வசூல் (திரும்பப்பெறுவதற்கு முன்) ரூ. 23.37 லட்சம் கோடியாக இருந்தது. இது FY23 இல் ரூ.19.72 லட்சம் கோடியாக இருந்த மொத்த வசூலை விட 18.48% வளர்ச்சி கண்டுகிறது. இதற்கிடையில், நிதியாண்டின் மொத்த கார்ப்பரேட் வரி வசூல் (தற்காலிகமானது) 13.06% அதிகரித்து ரூ.11.32 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் மொத்த கார்ப்பரேட் வரி வசூல் ரூ.10 லட்சம் கோடி மட்டுமே.
திருப்பி செலுத்தப்பட்ட தொகை:
தற்காலிக நேரடி வரி வசூல் (ரீஃபண்டுகளின் நிகரம்) பட்ஜெட் மதிப்பீட்டை விட 7.40% அதிகமாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 0.67% ஆகவும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் வழங்கப்பட்ட ரூ. 3.09 லட்சம் கோடியை விட 22.74 சதவீதம் அதிகரித்து, 2023-24 நிதியாண்டில் ரூ.3.79 லட்சம் கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டின் நிகர கார்ப்பரேட் வரியாக வசூலான (தற்காலிகமானது) ரூ. 9.11 லட்சம் கோடியானது, முந்தைய ஆண்டின் நிகர கார்ப்பரேட் வரி வசூலான ரூ.8.26 லட்சம் கோடியை விட 10.26% வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் பத்திரப் பரிவர்த்தனை வரி (தற்காலிகமானது) உட்பட மொத்த தனிநபர் வருமான வரி வசூல் ரூ.12.01 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு வசூலான ரூ.9.67 லட்சம் கோடியை விட 24.26% அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் ரூ.10.44 லட்சம் கோடியில் எஸ்டிடி (தற்காலிகமானது) உள்ளிட்ட நிகர தனிநபர் வருமான வரி வசூல் முந்தைய நிதியாண்டின் ரூ.8.33 லட்சம் கோடியை விட 25.23% வளர்ச்சியை எட்டியுள்ளது.