Credit Card : கிரெடிட் கார்டு வரி கூடுகிறது; எவ்வளவு தெரியுமா...? ஜூலை 1 முதல் வருகிறது புதிய விதிமுறை...!
2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு 20 சதவீதம் டிசிஎஸ் விதிப்பு செயல்படுத்தப்படுகிறது.
![Credit Card : கிரெடிட் கார்டு வரி கூடுகிறது; எவ்வளவு தெரியுமா...? ஜூலை 1 முதல் வருகிறது புதிய விதிமுறை...! Central goverment to impose 20 percent tcs on credit card spend abroad leaves holiday Credit Card : கிரெடிட் கார்டு வரி கூடுகிறது; எவ்வளவு தெரியுமா...? ஜூலை 1 முதல் வருகிறது புதிய விதிமுறை...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/21/b74cefb2c4985ac23e8bb70e020fe3861684645124959333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Credit Card : 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு 20 சதவீதம் டிசிஎஸ் விதிப்பு செயல்படுத்தப்படுகிறது.
கிரெடிட் கார்டு
2023-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து தனிநபர் வரிவிதிப்பு, முதலீடுகள் போன்றவற்றில் பல மாற்றங்களுடன் 2023-24 நிதியாண்டு தொடங்கியுள்ளது. மே மாதம் பல நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது, கிரெடிட் பயன்படுத்துவோருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
கிரெடிட் கார்டு வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அதன் பயன்பாடு அதிகம் உள்ளது. தாங்கள் வாங்க வேண்டிய பொருள்களை கிரெடிட் கார்டு மூலம் வாங்கி, பின்னர் மாதத்தின் தொடக்கத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தொகையை செலுத்த வேண்டும். மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகையே நிலவை தொகை என அழைக்கப்படுகிறது.
வரி அதிகரிப்பு
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை செய்த பின்பு, வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இந்திய மக்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு 20 சதவீத வரி வசூல் (TCS) செய்யும் விதிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு 20 சதவீதம் டிசிஎஸ் விதிப்பு செயல்படுத்தப்படுகிறது.
ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் வரும் LRS (Liberalised Remittance Scheme) கீழ் வருடத்திற்கு ரூ.2 கோடி வரையிலான வெளிநாட்டில் பணம் செலவு செய்யலாம். வெளிநாடுகளில் இந்திய கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும்போது அவரை LRS கீழ் வராது. ஆனால் ஜூலை 1ஆம் தேதி முதல் அனைத்து வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளும் LRS கீழ் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்பு வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 5 சதவீதம் மட்டும் வரி செலுத்தவேண்டி இருந்தது. தற்போது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் LRS கீழ் கொண்டு வரப்படுவதால் இனிமே 20 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும்.
எதற்கெல்லாம் உயர்வு?
ஒரு தனிநபர் தனது இந்திய கிரெடிட் கார்டை வெளிநாட்டில் பயன்படுத்தி ஒரு நிதியாண்டில் ரூ.7 லட்சம் வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் செய்தால் வரி விதிக்கப்படும். எனவே கிரெடிட் கார்டில் ரூ.7 லட்சம் வரை பரிவர்த்தனை மேற்கொண்டால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த டிசிஎஸ் வரி மருத்துவ செலவுகள், கல்வி செலவுகளுக்கான பரிமாற்றத்திற்கு தற்போது இருக்கும் 5 சதவீதம் வரி விதிப்பு ஜூலை 1ஆம் தேதிக்கு பிறகும் தொடருக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதர அனைத்தது விதமான கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கும் இனி இந்த புதிய நடைமுறைப்படி வரி வசூலிக்கப்படும். இந்த புதிய நடைமுறையால் முக்கியமான சுற்றுலா செல்பவர்கள், அவசர பயணத்திற்கு விமான டிக்கெட் புக் செய்பவர்கள் போன்றவர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)