Union Budget 2023: சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று மையங்கள்.. பட்ஜெட்டில் அதிரடிகாட்டிய நிதியமைச்சர்..
சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்குதலின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Budget 2023: இந்த ஆட்சியின் கடைசி முழுநேர பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவருகிறார். நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் இணைந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி) 2023 - 24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய நாட்டின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று மையங்கள் அமைக்கப்படும் என்றும் முன்னணி தொழில்துறை நிறுவனங்கல் பல் துறை ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலும், அதிநவீன பயன்பாடுகளை உருவாக்குவதிலும், சுகாதாரம், விவசாயம் போன்றவற்றில் இருக்கும் சிக்கலுக்கு தீர்வுகானும் வகையில் இது அமையும். இது ஒரு பயனுள்ள சுற்றுச்சூழல் அமைப்பை ஊக்குவித்து பல துறைகளில் தரமான மனித வளத்தை வளர்க்கும்" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
அரசு பணிகள் மூலம் அனைத்து துறைகளிலும் AI ஐ பயன்படுத்துவதை மத்திய அரசு பரிந்துரைத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, டிஜிட்டல் இந்தியா பாஷினி போர்ட்டல் மூலம், AI மற்றும் இயற்கை மொழி செயலாக்கத்தில் (NLP) உள்ள ஆதாரங்களை அரசாங்கம் தொடக்க நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதில் ஈடுபட்டுள்ளது. இந்தியா மே 2020 இல் தொழில்துறை அமைப்பான NASSCOM உடன் இணைந்து AI போர்ட்டலை அமைத்தது. அக்டோபரில் AI ஸ்டார்ட்அப்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும் நிதி திரட்டவும் உதவுவதற்காக RAISE (Responsible AI for Social Empowerment) என்ற திட்டத்தினை தொடங்கியது.
2022-23 பொருளாதார ஆய்வின்படி, AI போர்டல் 1,724 கட்டுரைகள், 829 செய்திகள், 276 வீடியோக்கள், 127 ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் AI தொடர்பான 120 அரசாங்க முயற்சிகளை வெளியிட்டுள்ளது. அரசாங்கம், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை மூலம் AI தொடர்பான அனைத்து மேம்பாடுகளையும் ஒருங்கிணைத்து சிறப்பிக்க இந்த போர்டல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் AI திறன் அமைப்பை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவுக்கான மையங்கள் அமைக்கப்படுவது தொழில்துறை வரவேற்றுள்ளது. ஜூன் 2022 இன் பெயின் & கேபிட்டலின் அறிக்கையின்படி, டேட்டா மற்றும் AI திறன்களில் திறமைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் இந்தியாவும் ஒன்றாகும், இது உலகின் 16% AI திறமையாளர்களை இந்தியா உருவாக்குகிறது என்று கூறுகிறது.