Budget 2023-24: பிரதமரின் வீடு திட்டத்துக்கு ரூ. 79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
Budget 2023-24: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023 -24ஆம் ஆண்டுகான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.
நாட்டின் 2023-2024வது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 75 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டை விட 66 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புற) மிஷன் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது, இது 2022 ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட திட்டமாக தொடங்கப்பட்டது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் (UTs) மற்றும் மத்திய நோடல் ஏஜென்சிகள் (CNAக்கள்) மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு இந்த திட்டம் மத்திய உதவியை வழங்குகிறது. 1.12 கோடிக்கு வீடுகளுக்கான சரிபார்க்கப்பட்ட தகுதியான குடும்பங்கள்/ பயனாளிகள் அனைவருக்கும் வீடுகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. அத்துடன் PMAY(U) வழிகாட்டுதல்களின்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) ஒரு வீட்டின் அளவு 30 சதுர மீட்டர் வரை இருக்கலாம். கார்பெட் ஏரியா, இருப்பினும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அமைச்சகத்தின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடன் வீடுகளின் அளவை அதிகரிக்கும் வசதியுடன் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பயனாளிகள் யார் யார்..?
- அதேபோல் 21 சதுர அடிக்கும் குறைவான வீடு உள்ளவர்கள், ஏற்கனவே உள்ள வீட்டை மேம்படுத்துவதற்ககவும் இந்த திட்டத்தில் இணைய முடியும்.
- திருமணமான தம்பதியரில் கணவனோ அல்லது மனைவியோ அல்லது இருவருமோ கூட, இந்த திட்டத்திற்கான வருமான உச்சவரம்பு தகுதி இருக்குமானால் அவர்கள் ஒரு தனி வீடு பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
- ஒரு குடும்பத்தினை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது, கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத பிள்ளைகள் ஆகியோர் ஒரு குடும்பம் என வரையறுக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளியாக விரும்பும் நபருக்கு, அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் பட்டியலின (SC) மற்றும் பழங்குடியினம் (ST) வகுப்பைச் சேர்ந்தவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பெண்கள் உள்பட அனைவரும் பயன்பெற தகுதி உடையவர்களாக உள்ளனர்.
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், இந்த திட்டத்தின் 4 கூறுகளின் கீழும் பயன்பெற முடியும். குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் உள்ள குடும்பத்தினர் மானியக் கடன் திட்டத்தில் மட்டுமே பயனடைய தகுதி உடையவர்களாக கருதப்படுவர்.
- குடும்பத்தில் உள்ள வருமானம் ஈட்டும் வயது வந்தவர்கள் தனிக் குடும்பமாக கருதப்படுவார். அதேபோல் அவர்களின் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயனாளியாக முடியும்.
மேலும் படிக்க.., பட்ஜெட் குறித்த லைவ் அப்டேட்ஸ்க்கு... இங்கே கிளிக் செய்யவும்...