Anand Srinivasan Reaction: 2022 பட்ஜெட்டில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் இதுதான் - ஆனந்த் சீனிவாசன் விளக்கம்
ரயில்வே துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், 3 வருட திட்டமாக அறிவித்துள்ளார்கள்.
கிரிப்டோகரன்சிக்கு 30 சதவீதம் வரி போடப்பட்டது தான் இந்த பட்ஜெட்டில் இருந்த ஒரே நல்ல விஷயம் என்று பொருளாதார நிபுணர் சீனிவாசன் கூறியுள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து தனியார் செய்தி சேனலுக்கு சீனிவாசன் அளித்த பேட்டியில், 'என்னை பொறுத்தவரைக்கும் பெரிய சிறப்பம்சம் என்றால், கிரிப்டோகரன்சியில் 30 சதவீதம் வரி போடப்பட்டது ஒரு நல்ல விஷயமாகும். கிரிப்டோகரனியில் மொத்தமாக தடை செய்வதற்கு முதல்படியாக இதனை எடுத்துக்கொள்கிறேன். பல இளைஞர்கள் கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பது என்று தெரியாமல், சூதாட்டம் மாதிரி ஈடுபட்டு, அதில் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி மூலம் பெறப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும். அதை வாங்கும்போது 1% DTS பிடிக்கப்படும் என்ற சட்டம் இந்த பட்ஜெட்டின் ஹைலெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் ஒன்றிய அரசு செய்த நல்ல விஷயம் இதுதான். நடுத்தர வர்க்கத்திற்கு எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இல்லை. 5 லட்சம் ரூபாய் வரை இருக்கிற வரியை நிரந்தரம் செய்யவில்லை. மறைமுக VDS என்ற திட்டத்தை அறிமும செய்திருந்திருக்கிறார்கள். அதாவது, நீங்கள் தவறாக ரிட்டர்ன் தாக்கல் செய்தததாக உங்களுக்கு தோன்றினால், இரண்டு வருடத்திற்குள் வரியை செலுத்தி Updated Return file செய்யலாம் என அப்படி கூறுவது, தயவு செய்து வரியை கட்டுங்கள் என்று ஒன்றிய அரசு மறைமுகமாக சொல்வதாக உள்ளது’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘கார்ப்பரேட் சர் சார்ஜை 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்களுக்கு நன்மையை கொடுத்துள்ளது. இதைதவிர, பெரிதாக எந்த திட்டத்தையும் அறிவிக்கப்படவில்லை. 5 வருடத்தில் 5 டிரிலிய்யன் டாலர் எகானிமியை ஆக்கினேன் என்று சொல்வது பொய் என்று தெரிந்துவிட்டது. அதனால், 25 வருடத்திற்கு திட்டத்தை தள்ளிவிட்டுவிட்டார்கள். 2047 என்று, அப்போது யார் இருக்கப்போகிறார்கள், தற்போது நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அப்போது யார் இருக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இலக்கை 2047 வரைக்கும் கொண்டு போய்விட்டார்கள். ரயில்வே துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், 3 வருட திட்டமாக அறிவித்துள்ளார்கள். ஒரு பட்ஜெட் என்பது இந்த ஆண்டில் என்ன வரி வரப்போகிறது, இந்தாண்டில் என்ன செலவு செய்யப்போகிறோம். ஆனால், அதை சரியாக சொல்லவில்லை என்பது என்னுடைய கருத்தாகும்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்