TN Budget 2025 : ”இந்தியாவுக்கே முன்னோடி!தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான்... அடித்து சொன்ன தங்கம் தென்னரசு
TN Budget 2025 : தமிழ்நாடு அரசு எந்தவித சமரசமும் இன்றி இருமொழிக்கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
இருமொழிக்கொள்கை தொடரும்:
கடந்த சில நாட்களாகவே மும்மொழி கொள்கை விவகாரம் பேசுப்பொருளான நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும் என்று தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் - நிதி ஒதுக்கீடு விவரம்
அதே போல மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். தமிழ்நாடு அரசு எந்தவித சமரசமும் இன்றி இருமொழிக்கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரம், வேளாண் துறை, தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. தமிழ்நாடு மட்டுமே பன்முக வளர்ச்சியை இலக்காக கொண்டு வெற்றி கொண்டது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
எந்த துறைக்கு எவ்வளவு:
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- ரூ 29,465 கோடி ஒதுக்கீடு
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை- ரூ 26,678 கோடி ஒதுக்கீடு
- பள்ளிக்கல்வித்துறை- ரூ46,767 கோடி நிதி ஒதுக்கீடு
- உயர்கல்வித்துறை-ரூ 8,494 கோடி நிதி ஒதுக்கீடு
- சமுக நலன் மற்றும் மகளிர் நலன் துறை-ரூ8,597 ஒதுக்கீடு
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை- ரூ.572 கோடி ஒதுக்கீடு
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை- ரூ 21906 கோடி ஒதுக்கீடு
- தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறை ரூ 3,915 கோடி ஒதுக்கீடு
- சிறுகுறு தொழில் துறை ரூ 1918 கோடி ஒதுக்கீடு
- எரிசக்தி துறைக்கு மொத்தமாக 21 ஆயிரத்து 168 கோடி நிதி ஒதுக்கீடு
- போக்குவரத்து துறை- 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய்நிதி ஒதுக்கீடு
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை- ஆயிரத்து 975 கோடி நிதி ஒதுக்கீடு
- தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை- ரூ.131 கோடி ஒதுக்கீடு
- நீர்வளத்துறை- அயிரத்து 460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- எரிசக்தி துறை- 21 அயிரத்து 178 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை-3 ஆயிரத்து 924 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆயிரத்து 563 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஆயிரத்து 433 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைக்கு ஆயிரத்து 980 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு 7 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- பொதுப்பணித்துறை- 2,457 கோடி நிதி ஒதுக்கீடு
- நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை ரூ 20,722 கோடி நிதி ஒதுக்கீடு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

