Union Budget 2023: இதுவரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யார் யார்? - முழுவிபரம் உள்ளே..!
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ததில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ததில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இதுவரை 73 முறை ஆண்டு பட்ஜெட்டும், 14 முறை இடைக்கால பட்ஜெட்டும், நான்கு முறை சிறப்பு பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 1947ஆம் ஆண்டுப் தாக்கல் செய்யப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டும், கடந்த முறை (2022) தாக்கல் செய்யப்பட்ட 73வது பட்ஜெட்டும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், இந்த முறையும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
இதுவரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்;
- சண்முகம் செட்டியார் - 1947 சுதந்திரத்துக்குப் பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதன் பின்னர் கிருஷ்ணமாச்சாரி 1957,1958,1964,1965 ஆகிய ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார். இவரது முதல் பட்ஜெட்டில் வரி தொடர்பான முக்கிய சீர் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
- 1975ஆம் ஆண்டு சுப்பிரமணியம் பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவரான இவர் இந்திரா காந்தி அமைச்சரவையில் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடராமன் 1980 மற்றும், 1981ஆம் ஆண்டில் நாட்டின் பட்டெட்டினை தாக்கல் செய்தார்.
- 1997ஆம் ஆண்டு ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சரானார். அந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் இந்தியாவின் கனவு பட்ஜெட் எனப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் முடுக்கி விடப்பட்டன. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு வரி குறைப்புகள் உள்ளிட்டவை நடைமுறை படுத்தப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் அதிக முறை அதாவது 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் இவர் தான்.
- நிர்மலா சீதாரமன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். மேலும் இவர் முழு நேர நிதி அமைச்சராக உள்ள முதல் பெண் நிதி அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்
நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட்:
அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) தனது ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அப்போது, வரவிருக்கும் 2023-24 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வரி திட்டங்களை தாக்கல் செய்யப்படும்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் கடைசி முழு ஆண்டு பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது. அதுமட்டுமின்றி, உலக பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
முக்கிய துறைகளில் மானியம் அறிவித்து ஜிடிபி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என பல்வேறு துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதேபோல, வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது தனிநபர்களின் கோரிக்கையாக உள்ளது.
கிராமப்புற இந்தியா:
இதுகுறித்து மணிபாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபக் அகர்வால் கூறுகையில், "கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் 65% மக்கள்தொகை பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைச் சார்ந்து இருப்பதால், இந்தத் துறையின் வேகமான மற்றும் நிலையான வளர்ச்சியானது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.