மேலும் அறிய

Defence Budget 2024: பாதுகாப்பு துறையில் இந்தியாவின் இலக்கு என்ன?

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான பெரிய இலக்குகளை இந்தியாவால் அடைய முடியுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இலக்குகளை அடைய இந்தியா கொண்டிருக்கும் திட்டம், துணிச்சலான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் இலக்கு: ஆனால், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான பெரிய இலக்குகளை இந்தியாவால் அடைய முடியுமா என்பதுதான் முக்கிய கேள்வி. 2028-29 ஆம் ஆண்டிற்குள் வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தியை 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும், ஏற்றுமதியை இருமடங்காக அதாவது 50,000 கோடி ரூபாயாகவும் உயர்த்துவதை இலக்காக கொண்டுள்ளது.

2023 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு ரூ.1.09 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024 நிதியாண்டில் ரூ.74,739 கோடியாக குறைந்தது. 2023 நிதியாண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க உற்பத்தி ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியதைத் தொடர்ந்து, இந்த சரிவு ஏற்பட்டது.

எதிர்பார்ப்புகளை கிளப்பும் மத்திய பட்ஜெட்: பாதுகாப்பு துறையில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ. 16,411 கோடியாக உயர்ந்தது. அதாவது, இது 2024 நிதியாண்டில் மொத்த பாதுகாப்பு உற்பத்தியில் 22 சதவிகிதம் ஆகும். 

கடந்த நிதியாண்டான 2023-24இல் பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.25 லட்சம் கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23 நிதியாண்டில் ஆயுதங்களை நவீனமயமாக்கவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

கடந்த நிதியாண்டை விட, இடைக்கால பட்ஜெட்டில் 6 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, 1.62 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2020 நிதியாண்டை ஒப்பிடுகையில் 57 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Embed widget