Budget 2023: எய்ம்ஸ் என்ன ஆனது..? பெண்களுக்கான இடஒதுக்கீடு.. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு!
பிப்ரவரி மாதம் 1 ம் தேதி 2023 - 24 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
நடப்பு 2023 ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி கூடுகிறது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி அன்றைய தினத்தின் இரு அவைகளிலும் கூட்டத்திலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும். தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 1 ம் தேதி 2023 - 24 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
கூட்டத்தொடரின் முதல் அமர்வு வருகின்ற 31ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கேட்டு கொண்டது. அத்துடன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியதாவது,
- கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் முறைகேடால் கிட்டத்தட்ட 2.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதில், யார் ஷேர் போட்டார்களோ, அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கி சரியான தீர்வு வழங்க வேண்டும் என மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்ட வேண்டும். தற்போது இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட கல் மட்டும்தான் உள்ளது. இதுவரை எந்தவொரு கட்டிடமோ, மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இராமநாதபுரத்தில் படித்து வருகின்றனர். எனவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்டு, மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.
- தமிழ்நாட்டில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளுக்கு நோய் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான போதிய தடுப்பூசி நம்மிடம் இல்லை. இதன் காரணமாக தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும்.
- பெண்களுக்கான இடஒதுக்கீட்டை ஏற்படுத்தி தர வேண்டும்.
- ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு சதவீதம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர முடியும் என்பது தெரியும். எனவே, இதற்கான கணக்கெடுப்பை மத்திய அரசு ஏற்படுத்தி தரவேண்டும்.
இதுமாதிரியான கோரிக்கைகள் பல்வேறு முன்வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.