PM Modi on Budget 2022: இது 100 ஆண்டுகளுக்கு தாங்கும்... மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி சொல்வது என்ன?
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022 மற்றும் 23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது உரையாற்றினார்.
அவரது உரையில், “சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டதில் இருந்து பல தரப்பிலிருந்தும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட். இந்த பட்ஜெட்டால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கும். விவசாயிகள், ஏழை மக்கள் இந்த பட்ஜெட்டில் அதிகம் பயன் பெறுவர். கங்கை நதிக் கரையோரம் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு மிகச் சிறப்பானது. மிகச் சிறப்பான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்” என்று கூறினார்.
I congratulate Finance Minister Nirmala Sitharaman for this 'People Friendly and Progressive budget'.
— ANI (@ANI) February 1, 2022
I will speak in detail on the Budget at 11 am tomorrow: PM Modi. pic.twitter.com/GPGMHcWMvJ
For the first time in the country, 'Parvat Mala' scheme is being kickstarted for regions like Himachal Pradesh, Uttarakhand, J&K, northeast. It'll facilitate modern system of transportation & connectivity in hills. This will provide strength to border villages: PM #Budget2022 pic.twitter.com/3WER419FBI
— ANI (@ANI) February 1, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்