Stock Market Crash:பங்குச் சந்தை சரிவு; வீழ்ச்சியில் எல்ஐசி, சொமேட்டோ; லாபத்தில் ரிலையன்ஸ்...
தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் பங்குகளால், இன்றைய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.
சரிவில் பங்கு சந்தைகள்:
தொழில்நுட்பம், நுகர்வோர், ஆட்டோமொபைல் மற்றும் பார்மா பங்குகளால், இன்று இழுத்துச் செல்லப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.
அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் தயக்கத்துடனும், எச்சரிக்கையுடனும் உள்ளனர். அதனால் பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் சென்றதற்கான காரணமாகவும் கூறப்படுகிறது.
பங்குச் சந்தைகள் நிலவரம்:
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 497.73 புள்ளிகள் குறைந்து, 55,268.49 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 147.15 புள்ளிகள் குறைந்து 16,483.85 புள்ளிகளாக உள்ளது.
Sensex falls 497.73 points to settle at 55,268.49; Nifty declines 147.15 points to 16,483.85
— Press Trust of India (@PTI_News) July 26, 2022
வீழ்ச்சிக்கு சென்ற நிறுவனங்கள்:
பங்குச் சந்தைகள் வீழ்ச்சியால், பல நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்தன. சென்செக்ஸ் தாக்கத்தின் காரணமாக இன்போசிஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்தன. தேசிய பங்குகள் வீழ்ச்சியால் நிஃப்டி ஐடி, நிஃப்டி எஃபெம்ஜி, நிஃப்டி பார்மா உள்ளிட்டவை வீழ்ச்சியை சந்தித்தன. சொமேட்டோ, எல்ஐசி பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்தன
லாபத்திற்கு சென்ற நிறுவனங்கள்:
பங்குச் சந்தைகள் வீழ்ச்சியிலும் , பல நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில் ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. நிஃப்டி குறியீட்டில், பவர் கிரிட் ஆப் இந்தியா ஏற்றம் கண்டது.
#ICICIBank $ICICIBANK Last 12 months Daily #StockMovement Line #Chart
— Abhipra (@AbhipraGroup) July 26, 2022
Max downward movement was -5.0%
Max upward movement was 10.85%
Stock majorly moved between -1.31% and 1.54%
Open account at https://t.co/giz54B9qdU and start #investing in #StockMarket #NSE #BSE pic.twitter.com/BOqOEf2kND
Also read: ஹஜ் புனித பயணம்.. ஜிஎஸ்டி வரிவிலக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்