மேலும் அறிய

Bank Holidays October 2023: அக்டோபரில் பேங்க் வேலையா போறீங்களா? இந்த நாட்களெல்லாம் விடுமுறை..

அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Bank Holidays October 2023: அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

வங்கிகள் விடுமுறை:

வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் வங்கிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் மட்டும் 16 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சில விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக வழங்கப்பட்டாலும், சில பகுதிகளில் சில நாட்கள் உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிரது. அதேநேரம், அனைத்து வங்கிகளுக்குமான ஆன்லைன் சேவை தடையின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

அக்டேபர் மாதத்தின் வார இறுதி விடுமுறையை தாண்டி, சிறப்பு தினங்களாக அனுசரிக்கப்படும் காந்தி ஜெயந்தி, துர்கா பூஜை, தசரா, விஜயதசமி, சரஸ்வதி பூஜை, சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள், நரக சதுர்தசி, மஹா அஷ்டமி, மகா நவமி, சம்வத்சாரி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஆனால், இந்த விடுமுறையானது அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும். உதாரணமாக, சம்வத்சாரி தினத்தையொட்டி அக்டோபர் 19ஆம் தேதி அன்று, குஜராத் மாநிலத்தை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை தின பட்டியல்:

  • அக்டோபர் 1: ஞாயிற்று கிழமை
  • அக்டோபர் 2: திங்கள் கிழமை (காந்தி ஜெயந்தி)
  • அக்டோபர் 8: ஞாயிற்று கிழமை
  • அக்டோபர் 14: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
  • அக்டோபர் 15: ஞாயிற்று கிழமை
  • அக்டோபர் 18: கடி பிஹு (அசாம் மாநில வங்கிகளுக்கு விடுமுறை)
  • அக்டோபர் 19: சம்வத்சரி திருவிழா (குஜராத் மாநில வங்கிகளுக்கு விடுமுறை)
  • அக்டோபர் 21: துர்கா பூஜை (அகர்தலா, கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
  • அக்டோபர் 22:  ஞாயிற்றுகிழமை
  • அக்டோபர் 23: தசரா/ மகா நவமி/ஆயத பூஜை (ஆந்திரா, அசாம், கர்நாடகா, கேரளா, நாகலாந்து, ஒடிசா, தமிழ்நாடு, திருப்பூரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை) 
  • அக்டோபர் 24: தசரா (ஆந்திரா மற்றும் மணிப்பூரை தவிர்த்து அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)
  • அக்டோபர் 25: துர்கா பூஜை (சிக்கிம் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
  • அக்டோபர் 26: துர்கா பூஜை (காங்டாக், ஜம்மு, ஸ்ரீநகர் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
  • அக்டோபர் 27: துர்கா பூஜை (சிக்கிமில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)
  • அக்டோபர் 28: நான்காவது சனிக்கிழமை
  • அக்டோபர் 31 - சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் (குஜராத்தில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)

தமிழ்நாடு விடுமுறை பட்டியல்:

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக வழங்கப்படும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தாண்டி வங்கிகளுக்கு கூடுதலாக 4 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14-ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, அக்டோபர் 24-ஆம் தேதி விஜயதசமி, அக்டோபர் 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திலும் தமிழகத்தில் இதே மாதிரி 4 நாட்கள் வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

KN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget