Amazon Summer Sale : ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 40 சதவிகிதம் ஆஃபர்.. விரைவில் வரும் அமேசான் கோடைக்கால தள்ளுபடி!
அமேசான் தளத்தின் தற்போதைய 2022ஆம் ஆண்டுக்கான கோடைக்கால தள்ளுபடி விற்பனை விரைவில் தொடங்கவுள்ளது.
அமேசான் தளத்தின் தற்போதைய 2022ஆம் ஆண்டுக்கான கோடைக்கால தள்ளுபடி விற்பனை விரைவில் தொடங்கவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு வெளியாகவில்லை என்ற போதும், இந்த விற்பனையில் என்ன விதமான தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம் என்பதை அமேசான் இந்தியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மறைமுகமாகத் தெரிவித்துள்ளது.
அமேசான் இந்தியா நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஆர்.பி.எல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, இந்த வங்கிகளின் கிரெடிட் கார்ட்கள், டெபிட் கார்ட்கள் ஆகியவற்றின் மூலமாகவும், ஈ.எம்.ஐ மூலமாகவும் வாங்கும் பொருள்கள்களுக்கு 10 சதவிகித தள்ளுபடி வழங்குகிறது. மேலும், அமேசான் இந்தியா நிறுவனத்தின் அறிவிப்புகளின் படி, இந்தக் காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்கள், இயர்பட்ஸ் முதலான பொருள்களில் 60க்கும் மேற்பட்ட புதிய மாடல்கள் வெளியிடப்படும் எனக் கூறியுள்ளது.
அமேசான் சம்மர் சேல் என்ற பிரத்யேக இணையப் பக்கத்தை அமேசான் இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தத் தளத்தில் தள்ளுபடி குறித்தும், புதிய ஆஃபர்களைக் குறித்தும் தொடர்ந்து அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த தள்ளுபடி விற்பனையின் போது பஜாஜ் ஃபின்செர்வ் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவோருக்கு விலையில்லா ஈ.எம்.ஐ ஆஃபர்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அமேசான் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமேசான் கோடைக்கால விற்பனையில், ஸ்மார்ட்ஃபோன்களுக்கும், அவற்றின் அக்செஸரிகளுக்கும் சுமார் 40 சதவிகிதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஷாவ்மி 11T ப்ரோ, ஒன்ப்ளஸ் நோர்ட் CE 2 5G, சாம்சங் கேலக்ஸி M33 5G, ஐகூ Z6 5G, ரெட்மீ நோட் 11T 5G முதலான பிரபலமான ஸ்மார்ட்ஃபோன் மாடல்களுக்கும் இந்தத் தள்ளுபடி பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, Guess and Win முதலான சிறிய பந்தயங்களில் கலந்துகொண்டு கூடுதல் தள்ளுபடி ஆஃபர்களைப் பெறலாம்.
பிற எலக்ட்ரானிக் பொருள்களில், லேப்டாப் வாங்குபவர்களுக்கு சுமார் 30 சதவிகிதம் வரை தள்ளுபடியும், ஹெட்ஃபோன்கள் வாங்குவோருக்கு சுமார் 75 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் கோடைக்கால தள்ளுபடி விற்பனையின் போது, ஜானர் மேஜிக்புக் X 15, ஆப்பிள் ஐமேக் 2021, லெனோவோ யோகா ஸ்மார்ட் டேப், ஜேபிஎல் ட்யூன் 130NC முதலான பல்வேறு புதிய மாடல்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை மட்டுமின்றி, 2022ஆம் ஆண்டின் அமேசான் கோடைக்கால தள்ளுபடி விற்பனையில் தொலைக்காட்சிகள், கேமிங் அக்செஸரிகள் முதலானவற்றிற்கும் சுமார் 50 சதவிகிதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.