Adani Group Share Sale: 3 நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 3.5 பில்லியன் டாலர் நிதி திரட்ட அதானி குழுமம் முடிவு!
Adani Group Share Sale: அதானி குழுமத்தில் உள்ள மூன்று பங்குகள் விற்பனை மூலம் 3.5 பில்லியன் டாலர் ஈட்ட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தில் உள்ள மூன்று நிறுவனங்களின் பங்குகளை விற்பனை (equity share sale) செய்து 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி திரட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், Adani Enterprises Ltd., Adani Green Energy Ltd. மற்றும் Adani Transmission Ltd ஆகிய நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு அதானி க்ரீன் எனர்ஜி தலைமை நிர்வாக குழுவினர் அனுமதியளிதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் சொத்து மதிப்பை அதிகரிப்பதற்காக ’Follow-on Public Offer (FPO)’ முறைப்படி மூன்று நிறுவன பங்குகளை விற்க முன்வந்துள்ளது.
அதானி குழும நிறுவன கணக்கு வழக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்தஹிண்டன்பர்க் ரிசர்ச் ( Hindenburg Research ) நிறுவனம் குற்றம் சாட்டியது. இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்தன. .அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்ட தொடர் பங்கு வெளியீடு (எப்.பி.ஓ.) மூலம் 4.55 கோடி பங்குகளை விற்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனைக்கு பிறகு அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தன. இதனால் நிதி திரட்டுவதன் மூலம் சொத்து மதிப்பை அதிக்க முடிவெடுத்தது.