மேலும் அறிய

Aadhar Linking: நாளை கடைசி நாள்... ஆதாரை இணைத்து விட்டீர்களா? இல்லனா சம்பளம் கிடையாதாம்..!

நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் நாளைக்குள் (ஆகஸ்ட் 31) சம்பளம் பெறும் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Aadhar Linking: நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் நாளைக்குள் (ஆகஸ்ட் 31) சம்பளம் பெறும் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்  கார்டு:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,  ஜுன் 30ம் தேதியுடன் அந்த அவகாசம் நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அதேபோல, ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு இணைத்திருப்பதும் அவசியமானது. 

அதாவது, பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் திட்டங்கள் அனைத்திலும், பயனாளிகளுக்கே உரிய தொகை செல்வதை உறுதி செய்யும் வகையில், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்படும் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் நாளைக்குள் (ஆகஸ்ட் 31) சம்பளம் பெறும் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலை:

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் உள்ளவருக்கு ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் பணிவாய்ப்பு வழங்க தவறினால் ஊதியத்தை அபராதமாக வழங்கும் வகையில் விதிகள் உள்ளன. இப்படி இருக்கும் நிலையில், 100 நாள் வேலை  திட்டத்தில், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி இருந்தது.  இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் சம்பளம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகமானோர் இணைக்காமல் இருந்ததால் மாநில அரசுகள் காலக் கெடுவை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டித்தது. 

நாளை கடைசி நாள்:

அதன்படி, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதற்கான படிவத்தை வங்கியில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்காவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget