(Source: ECI/ABP News/ABP Majha)
RX 100: நாயகன் மீண்டும் வரான்.. களத்தில் இறங்கும் யமஹா RX 100! எப்படி வரும்? எப்போது வரும்?
இந்திய பைக் பிரியர்களின் ஃபேவரிட் பைக்காக இருந்த யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்திய பைக் பிரியர்களின் ஃபேவரிட் பைக்காக இருந்த யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
பைக் பிரியர்களின் முதல் தேர்வு:
இந்தியாவில் வெளியாகும் பைக் பிராண்டுகளில் யமஹாவும் மிக பிரபலமானது. யமஹா நிறுவனம் எத்தனை
யோ பைக்குகளை தயாரித்து விற்பனை செய்திருந்தாலும், அந்நிறுவனத்தின் பெருமையாக விளங்குவது ஆர்எக்ஸ் 100 பைக் தான். வயது கடந்து தலைமுறைகளைக் கடந்து விரும்பப்படும் பைக்காக அது இருக்கிறது. அந்த பைக்கை இப்போதும் விரும்பி வாங்குபவர்கள் இருக்கிறார்கள். பழைய பைக் சந்தையில் அந்த பைக்கிற்கு என்று இன்னும் வரவேற்பு இருக்கிறது. கடந்த 1985 ஆண்டு முதல் 1996 வரை விற்பனையில் இருந்த இந்த பைக்கின் பாகங்கள், இரண்டு பத்தாண்டுகளைக் கடந்தும் கிடைக்கிறது. யமஹாவின் எத்தனையோ பைக்குகள் விற்பனையில் இருந்தாலும், யமஹா ஆர்எக்ஸ் 100 ஒரு சகாப்தமாகவே இருந்து வருகிறது.
மீண்டு(ம்) வரும் ஆர்எக்ஸ் 100:
இந்த நிலையில், யமஹா இந்தியா நிறுவனத்தின் சேர்மன் எய்ஷின் சிஹானா பிசினஸ் லைன் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ஆர்எக்ஸ் 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வருவது பற்றி சூசகமாக பேசியுள்ளார். ஆனால், யமஹாவால் அந்த பைக்கை அப்படியே விற்பனைக்குக் கொண்டுவர முடியாது. இரண்டு கியர்கள் கொண்ட அந்த பைக்கின் எஞ்சின் தற்போதைய பிஎஸ்6 விதிமுறைகளுக்கு சற்றும் பொருந்தாது. அதே போல, ஏதோ ஒரு பைக்கின் மீது ஆர்எக்ஸ் 100 பேட்ச்சை பொறுத்தி விற்பனை செய்துவிட முடியாது. ஏனெனில், இந்த புதிய பைக் பழைய பைக்கைப் போல அனைவரது மனதிலும் இடம்பிடிக்க வேண்டும்.
இது பழைய மாடலுக்கு மரியாதை செலுத்தும் ரெட்ரோ வடிவமைப்பின் சரியான கலவையைக் கொண்டிருக்க வேண்டும். அதே போல பழைய பைக்கை போல பெர்ஃபார்மன்ஸிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். இது தான் யமஹா இந்தியா முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.
யமஹா ஆர்எக்ஸ் 100 மீண்டும் விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது என்றாலும், அதன் தயாரிப்பு எப்போது தொடங்கும் என்பது தான் பைக் பிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தியாகும். 2025 வரைக்குமான தனது தயாரிப்புகளை வரிசைப் படுத்தியிருக்கிறது யமஹா. அதனால் ஆர்எக்ஸ் 100 2026ம் ஆண்டுக்குப் பிறகே உயிர் பெறும். யமஹா தற்போது 125சிசி ஸ்கூட்டர், 150சிசி பைக்குகள் 250 சிசி பைக் மற்றும் ஸ்போர்ட் பைக்குகளை மட்டும் தற்போது விற்பனை செய்துவருகிறது.
இந்தியா தான் நம்பர் 2:
தற்போதைய நிலையில் இந்தியாவில் நொய்டா மற்றும் சென்னையில் யமஹா பைக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதோடு, சுமார் 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபப்டுகிறது. யமஹா பைக்குகளை சுமார் 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தோனேஷியாவிற்கு அடுத்து இரண்டாமிடத்தில் இந்தியா இருக்கிறது. 2026ல் ஆர்.எக்ஸ் 100 விற்பனைக்கு வந்ததும், பழைய மாடல்களை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வந்த ராயல் என்ஃபீல்ட், ஜாவா மற்றும் யெஸ்தி ப்ராண்ட் வரிசையில் யமஹாவும் இடம்பிடிக்கும். இந்த பைக் ப்ரீமியம் வகையி அறிமுகப்படுத்தப்படும் என்பதால் இதன் விலையும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
யமஹா ஆர்எக்ஸ் 100 மறு விற்பனைக்கு வருகிறது என்றால், சுசுகி நிறுவனத்தின் சாமுராய் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் சிடி-100 பைக்குகளும் மறு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.