Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகியின் மூன்றாவது மாடலாக, வேகன் ஆர் காரின் விற்பனை 35 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

Maruti Wagon R: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகியின் வேகன் ஆர் கார் மாடல் 26 ஆண்டுகளுக்கு முன்பாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது மாடல்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகியின் வேகன் ஆர் 35 லட்சம் யூனிட் உற்பத்தியை கடந்துள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 26 ஆண்டுகளுக்கு பிறகு, டால்-பாய் ஹேட்ச்பேக் ஆனது இந்த சாதனையை படைத்துள்ளது. ப்ராண்டின் ஆல்டோ மற்றும் ஸ்விஃப்டை தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை வேகன் ஆர் பெற்றுள்ளது.
வேகன் - ஆரை மிஞ்சிய ஸ்விஃப்ட்
வேகன் ஆர் அறிமுகப்படுத்தப்பட ஓராண்டிற்குப் பிறகு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆல்டோ காரானது, 35 லட்சம் யூனிட் விற்பனையை கடந்த மாருதியின் முதல் மாடலாகும். மலிவான விலை மற்றும் சந்தையில் அதன் நிலை ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும். தொடர்ந்து, வேகன் ஆர் அறிமுகப்படுத்தப்பட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தைப்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட், இந்த மைல்கல்லை இரண்டாவதாக எட்டியது. குறைந்த விலை மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களால் அதிகம் விரும்பப்பட்டாலும், வேகன் ஆரை காட்டிலும் முன்பாகவே ஸ்விஃப்ட் 35 லட்சம் யூனிட்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
வேகன் - ஆர் கடந்து வந்த பாதை:
ஹுண்டாயின் சாண்ட்ரோவிற்கு மாற்றாக மாருதி சுசூகியின் முதல் தலைமுறை வேகன் ஆர் காரானது 1999ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்த காரானது 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்பட்டு, 67hp மற்றும் 90Nm ஆற்றல் உற்பத்தி செய்யப்பட்டது. காரின் டால் பாய் வடிவமைப்பானது உயர அடிப்படையில் அதிக இடவசதியை வழங்கியது. ப்ராண்டின் விற்பனைக்கு பிறகான சிறந்த சேவையும் வேகன் ஆரின் விற்பனைக்கு பெரும் உந்துகோலாக அமைந்தது. 2004ம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் வழங்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் அதன் முதல் வகையான LPG பவர்டிரெய்ன் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்க்ரேட் செய்யப்பட்ட வேகன் -ஆர்:
புதிய ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட முற்றிலும் புதிய தோற்றம் கொண்ட, இரண்டாவது தலைமுறை வேகன் ஆர் எடிஷன் 2010ம் ஆண்டு சந்தைப்படுத்தப்பட்டது. இந்த எடிஷன் வேகன் ஆரில் தான் முதன்முறையாக சிஎன்ஜி ஆப்ஷன் சேர்க்கப்பட்டது. இதற்கு வழங்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட்டில் லேசான வெளிப்புற மாற்றங்கள், இரட்டை ஏர்பேக்குகள், ABS மற்றும் ஆட்டோமேடட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் ஆகியவை இணைக்கப்பட்டன.
வேகன் - ஆர் தற்போதைய எடிஷன் விவரம்:
கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாவது தலைமுறை வேகன் ஆர் எடிஷன் தற்போது விற்பனையில் உள்ளது. இதன் ஃபேஸ்லிஃப்டானது 2022ம் ஆண்டு சந்தைப்படுத்தப்பட்டது. இதில் a 90hp மற்றும்114Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல், 68hp மற்றும் 91Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரண்டிலும் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடர் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்களை பயனர்கள் தேர்வு செய்யலாம். 1.0 லிட்டர் இன்ஜின் ஆனது சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த காரின் விலை வரம்பானது ரூ.4.98 லட்சத்தில் தொடங்கி ரூ.6.95 லட்சம் வரை நீள்கிறது. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது டாடா பஞ்ச், ரெனால்ட் க்விட், ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், மாருதி செலேரியோ, இக்னிஸ், எஸ்-ப்ரெஸ்ஸோ, ஆல்டோ கே10 மற்றும் டாடா டியாகோ ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.





















