7 Seater Electric Cars: அடுத்தடுத்து சந்தைக்கு வரும் 7 சீட்டர் மின்சார கார்கள் - மாடல்களும், தொடக்க விலை விவரங்களும்
7 Seater Electric Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 7 சீட்டர் மின்சார கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

7 Seater Electric Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 7 சீட்டர் மின்சார கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
7 சீட்டர் மின்சார கார்:
மின்சார கார்களின் பயன்பாடு என்பது நாடு முழுவதும் மிக வேகமாக வளர்ந்துள்ளது. அதேநேரம், பெரிய குடும்பம் மற்றும் நண்பர்கள் கூட்டம், நல்ல இடவசதியுடன் மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்வதற்கான 7 சீட்டர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்த கார்களின் செயல்திறன், புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட மலிவு விலையில் கார்களை அணுக பொதுமக்கள் விரும்புகின்றனர். இந்த கருத்துகளை மனதில் கொண்டே பல கார் உற்பத்தி நிறுவனங்கள், அடுத்தடுத்து 8 வகையிலான 7 சீட்டர் மின்சார கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளன. அபாரமான செயல்திறன், போதுமான இடவசதி, வசதியான அம்சங்கள் மற்றும் பிரீமியம் குவாலிட்டியுடன் பயனர்களை கவரும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முன்னணி நிறுவனங்களின் மாடல்கள்:
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல முன்னணி நிறுவனங்களும் தங்களது 7 சீட்டர் கார் மாடல் மூலம், மின்சார கார் செக்மெண்டில் வலுவான கால்தடம் பதிக்க விரும்புகின்றன. அதன்படி இந்தியாவின் டாடா மற்றும் மஹிந்திராவுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த JSW MG மோட்டார்ஸ், கியா, வால்வோ மற்றும் ஹுண்டாய் ஆகிய நிறுவனங்களின் கார் மாடல்களும் வெகு விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளன. எரிபொருள் விலை மற்றும் காற்று மாசுபாடு ஆகிய இரண்டு முக்கிய பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வாக, இந்தியாவில் அறிமுகமாக உள்ள 7 சீட்டர் மின்சார கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
விரைவில் சந்தைக்கு வரும் 7 சீட்டர் மின்சார கார்கள்:
| கார் மாடல் | எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி | காரின் ரேஞ்ச் | எதிர்பார்க்கப்படும் விலை |
| கியா காரென்ஸ் EV | ஜுன் 2025 | 400 கிமீ.,க்கும் மேல் | ரூ.20 லட்சம் |
| MG M9 | ஜுன் 2025 | 430 கிமீ., | ரூ.70 லட்சம் |
| மஹிந்திரா XEV 7e | 2025ன் இரண்டாம் பாதி | 500 கிமீ., | ரூ.21 லட்சம் |
| வால்வோ EX90 | 2025ன் இரண்டாம் பாதி | 600 கிமீ.,க்கும் மேல் | ரூ.1.5 கோடி |
| வின்ஃபாஸ்ட் VF9 | பிப்ரவரி 2026 | 531 கிமீ., | ரூ.65 லட்சம் |
| ஹுண்டாய் ஐயோனிக் 9 | மார்ச் 2026 | 620 கிமீ., | ரூ.1 கோடி |
| டாடா சஃபாரி EV | மே 2026 | சுமார் 500 கிமீ., | ரூ.30 லட்சம் |
| ஸ்கோடா விஷியன்7S | 2027 | 600 கிமீ.,க்கும் மேல் | ரூ.50 லட்சம் |
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 7 சீட்டர்கள்:
பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்குறிப்பிடப்பட்ட 7 சீட்டர்கள் அனைத்துமே, மலிவு விலையில் ஆச்சரியம் தரக்கூடிய வகையிலான ரேஞ்சிங், பல்வேறு பயன்பாட்டு அம்சங்கள், தினசரி பயன்பாட்டிற்கான அதிகப்படியான செயல்திறன் , உயர் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளன. 400 முதல் 600 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் இந்த கார்களின் விலை, ரூ.20 லட்சம் தொடங்கி ரூ.1.5 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் மலிவு விலை மற்றும் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு, பல 7 சீட்டர் மின்சார கார்கள் இந்திய சந்தையில் கிடைக்கும். புதிய தலைமுறை மின்சார வாகனங்கள் மூலம், இந்திய மின்சார கார் சந்தையில் தடம் பதிக்க உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
அள்ளி வீசும் உற்பத்தி நிறுவனங்கள்:
கியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் காரென்ஸ், மஹிந்திராவின் XEV 7e, டாடாவின் சஃபாரி மற்றும் ஹுண்டாயின் ஐயானிக் 9 ஆகிய புதிய மாடல் கார்கள், இந்திய மின்சார கார் சந்தையை முற்றிலும் மேம்படுத்த உள்ளது. அதேநேரம் அதிகப்படியான ரேஞ்சிங், புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள், கவனத்தை ஈர்க்கக் கூடிய அம்சங்கள் காரணமாக MG M9, வின்ஃபாஸ்ட் VF9, ஸ்கோடா விஷியன்7S மற்றும் வால்வோ EX90 வாடிக்கையாளர்களை வெகுவாக கவரக்கூடும்.
அதாவது டாடா, கியா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் மலிவு விலை மூலம் வாடிக்கையாளர்களை கவர விரும்புகின்றன. அதேநேரம் எம்ஜி மோட்டார்ஸ், வால்வோ மற்றும் ஸ்கோடா போன்ற சொகுசு கார் நிறுவனங்கள், புதிய தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் அம்சங்களை கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளன.





















