Toyota Car Savings: டொயோட்டா கார்களின் விலையில் அதிரடி மாற்றம்! ஃபார்ச்சூனர், இன்னோவா கிரிஸ்டா-க்கு எவ்வளவு குறைவு? முழு விவரம்
டொயோட்டாவின் பிரீமியம் கார்கள் அதிகபட்ச சலுகைகளைப் பெறுகின்றன, குறிப்பாக ஃபார்ச்சூனரில் தொடங்கி ஹில்க்ஸ் வரை இந்த விலை குறைப்பு அமையயுள்ளது

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு பின்னர் டோயோடா கார் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு மொத்த சலுகையும் வழங்கும் என்று தெரிவித்துள்ள நிலையில் எந்தெந்த கார்களின் விலை குறையும் என்பதை இத்தொகுப்பில் காணலாம்.
ஜிஎஸ்டி 2.0
புதிய ஜிஎஸ்டி திருத்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஹேட்ச்பேக் மற்றும் சப்-4 மீட்டர் எஸ்யுவிக்களின் விலை பெரிய அளவில் குறையவுள்ளது. மேலும் காம்பேக்ட், மிட்சைஸ் மற்றும் பெரிய எஸ்யுவிகளின் விலையும் கணிசமாக குறையும். இதற்கு முன்பு இந்த எஸ்யுவிகளுக்கு 28% வரியுடன் கூடுதலாக 15% முதல் 22% வரை செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் புதிய திருத்தத்தின்படி, இவ்வகை எஸ்யுவிகளுக்கு நேரடியாக 40% வரி விதிக்கப்படுவதுடன், செஸ் வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்த கார்கள் 3% முதல் 10% வரை விலை குறைய வாய்ப்பு உள்ளது.
டொயோட்டா கார்களில் விலை குறைவு:
டொயோட்டாவின் பிரீமியம் கார்கள் அதிகபட்ச சலுகைகளைப் பெறுகின்றன, குறிப்பாக ஃபார்ச்சூனரில் தொடங்கி ஹில்க்ஸ் வரை இந்த விலை குறைப்பு அமையயுள்ளது, ஃபார்ச்சூனர் கார் ரூ.3.49 லட்சம் வரை குறையும்அதைத் தொடர்ந்து லெஜெண்டரின் விலை ₹ 3.34 லட்சம் குறைப்புடன் உள்ளன. பிரபலமாக விற்பனையாகும் இன்னோவா கிரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைக்ராஸ் இப்போது முறையே ₹ 1.81 லட்சம் மற்றும் ₹ 1.16 லட்சம் மலிவு விலையில் கிடைக்கின்றன. டொயோட்டா ஹிலக்ஸ் ₹ 2.53 லட்சம் மலிவு விலையில் கிடைக்கிறது, அதே நேரத்தில் கேம்ரி செடான் ₹ 1.02 லட்சம் மலிவு விலையில் கிடைக்கிறது. டொயோட்டா வெல்ஃபயர் ₹ 2.78 லட்சம் விலைக் குறைப்புடன் கிடைக்க உள்ளது. இதே போல் போல் 5 சீட்டர் காரான டொயோடா அர்பன் க்ரூசர் ஹைரைடர் 65,000 வரை குறைந்து விற்பனைக்கு வரவுள்ளது.
டொயோட்டா கார்கள் மற்றும் அவற்றுக்கான விலை குறைப்பு விவரங்கள் பின்வருமாறு
| டொயோட்டா கார்கள் | விலை குறைப்பு |
| டொயோட்டா கிளான்சா | ₹85,300 |
| டொயோட்டா டைசர் | ₹1,11,100 |
| டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா | ₹1,80,600 |
| டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்: | ₹1,15,800 |
| டொயோட்டா ஃபார்ச்சூனர் | ₹3,49,00 |
| டொயோட்டா லெஜெண்டர் | ₹3,34,000 |
| டொயோட்டா ஹிலக்ஸ் | ₹2,52,700 |
| டொயோட்டா கேம்ரி | ₹1,01,800 |
| டொயோட்டா வெல்ஃபயர் | ₹2,78,000 |
ஏற்கெனவே முன்னணி கார் நிறுவனங்களான மஹிந்திரா, ரெனால்ட், மெர்சிடீஸ்-பென்ஸ், டாடா மோட்டார்ஸ், சிட்ரோயன் ஆகியவை , ஜிஎஸ்டி நிவாரண பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்களின் பட்டியலில் டொயோட்டாவும் இணைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் பல கார் உற்பத்தியாளர்கள் திருத்தப்பட்ட விலைகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, டீலர்ஷிப்புகளில் முன்பதிவு தற்போது திறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















