Top 5 Scooters: இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்ஸ் லிஸ்ட் இதுதான்.. மைலேஜ், விலை, தரம் எப்படி?
இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு தரமான 5 ஸ்கூட்டரின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நகரங்களில் கியர் வாகனங்களை ஓட்டுவதற்கு பதிலாக ஸ்கூட்டர் ஓட்டுவதற்கே அனைவரும் விரும்புகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் நல்ல மைலேஜ், தரம், பட்ஜெட் விலையில் ஓட்டுவதற்கு ஏற்ற தரமான 5 ஸ்கூட்டர்கள் பட்டியலை கீழே காணலாம்.
1. Honda Activa 6G:
இரு சக்கர வாகன தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஹோண்டா. அவர்களின் பிரத்யேக ஸ்கூட்டர் இந்த ஆக்டிவா 6ஜி. இதில் 109.51 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 60 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது இந்த ஆக்டிவா 6ஜி. ஓட்டுவதற்கும், வயதானவர்கள் உள்பட அனைத்து வயதினரும் ஓட்டுவதற்கு ஏற்ற வாகனமாக இந்த ஹோண்டா ஆக்டிவா 6ஜி உள்ளது. நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலில் ஓட்ட இந்த வாகனம் சிறந்த தேர்வு. இதன் விலை ரூபாய் ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.13 லட்சம் வரை விற்கப்படுகிறது.

2. TVS Jupiter 125:
இந்திய மோட்டார் சந்தையில் தனக்கென்று தனி அடையாளத்தை கொண்டுள்ள நிறுவனம் டிவிஎஸ். ஸ்கூட்டர், பைக் என இரண்டிலும் வெற்றிகரமான பல மாடல்களை தயாரித்துள்ளனர். அவர்களின் வெற்றிகரமான படைப்பு TVS Jupiter 125 ஆகும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 124 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தொடு திரை எனப்படும் டச் ஸ்கிரீனும் இதில் உள்ளது. இதன் விலை ரூபாய் 1.09 லட்சம் முதல் ரூபாய் 1.20 லட்சம் வரை ஆகும். 50 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும்.
3. Hero Maestro Edge 125:
ஹீரோ நிறுவனத்தின் ஸ்கூட்டர் படைப்பு மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகும். அசத்தலான ஸ்போர்ட்ஸ் ரக ஸ்கூட்டர் போல இந்த மேஸ்ட்ரோ எட்ஜ் உள்ளது. இதில் 124.66 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அசத்தலான ஸ்டைலுடன் அதிநவீன வசதிகளுடன் இந்த ஸ்கூட்டர் உள்ளது. யஸ்பி சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இதன் விலை ரூ.79 ஆயிரத்து 212 ஆகும். இது 45 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

4. Suzuki Access 125:
சுசுகி நிறுவனத்தின் அசத்தலான ஸ்கூட்டர் இந்த சுசுகி அசெஸ் 125. இதன் விலை ரூபாய் தொடக்க விலை ரூபாய் 1.10 லட்சம் ஆகும். 10.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இது கிக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 5.3 லிட்டர் பெட்ரோல் தாங்கும் டேங்க் உள்ளது. ட்ரம், டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. தரமான, கம்பீரமான தோற்றத்தில் இந்த சுசுகி அசெஸ் உள்ளது. இது 50 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

5. Honda Dio:

இந்தியாவில் ஸ்கூட்டர் என்றாலே பலரது நினைவுக்கும் முதலில் வருவது டியோ. ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த டியோ ஆகும். இதில் 109.51 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா டியோவின் தொடக்க விலை ரூ 1 லட்சம் ஆகும். பெட்ரோலில் ஓடும் இந்த ஹோண்டா டியோ 50 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. நகரங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் ஓட்டுவதற்கு இலகுவானதாக இந்த டியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.





















