மேலும் அறிய

Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்

Highest ARAI Mileage Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ARAI சான்றிதழ் அடிப்படையில் அதிக மைலேஜை கோரும் கார் மாடல்களின், நிஜ உலக திறன் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Highest ARAI Mileage Cars: ARAI சான்றிதழ் அடிப்படையில் அதிக மைலேஜை கோரும் கார் மாடல்களின், நிஜ உலக செயல்திறன் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

அதிக மைலேஜ் தரும் கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கார் வாங்குபவர்களிடையே, எரிபொருள் செயல்திறன் என்பது முக்கியமான அம்சமாக பரிசீலிக்கப்படுகிறது. இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் எனப்படும் ARAI தரப்பில் வழங்கப்படும் சான்றிதழ் அடிப்படையில், காரின் மைலேஜ் மதிப்பிடப்படுகிறது. இதில் கிடைக்கும் எண்ணிக்கையானது நிஜ உலக பயன்பாட்டில் ஒத்துப்போவதில்லை என்றாலும், காரின் செயல்திறனை கணிக்கவும் மற்றும் மற்ற மாடல்களுடன் ஒப்பிடுவதற்கு பயனுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் ARAI சான்றிதழ் அடிப்படையில்  இந்திய சந்தையில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சான்றிதழ்க்கான சோதனைகள் ஒரு லிட்டருக்கு எத்தனை கிலோ மீட்டர் என கணக்கிடப்படுவதால், பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் மட்டுமே கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

ARAI மைலேஜ் - டாப் 5 கார்கள்:

5. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் கார் மாடலானது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இதே இன்ஜினை பயன்படுத்தும் காம்பேக்ட் செடான் ஆன டிசையரை காட்டிலும் 35 கிலோ குறைந்த எடையை கொண்டுள்ளது. இதன் காரணமாக ARAI சான்றிதழ் அடிப்படையில் ஆட்டோமேடிக் வேரியண்டில் லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டரும், மேனுவல் வேரியண்டிற்கு 24.8 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குகிறது. இதே பாணியில் டிசையர் ஆனது முறையே 25.71 மற்றும் 24.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதேநேரம், நிஜ உலக பயன்பாட்டில் ஸ்விஃப்டானது மேனுவல் வேரியண்டில் 14 முதல் 17 கிலோ மீட்டரும், ஆட்டோமேடிக் வேரியண்டில் 12.7 முதல் 15 கிலோ மீட்டரும் மட்டுமே மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.


Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்

விலை வரம்பு: ரூ.5.79 - ரூ.8.65 லட்சம்

4. மாருதி செலேரியோ

அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் மாடல்களில் ஸ்விஃப்டை பின்னுக்குதள்ளி செலேரியோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.  ARAI சான்றிதழ் அடிப்படையில் மேனுவல் வேரியண்டில் லிட்டருக்கு 25.24 கிலோ மீட்டரும், ஆட்டோமேடட் மேனுவல் வேரியண்டிற்கு 26 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் நிஜ உலக பயன்பாட்டில் முறையே 14.5-26 கிலோ மீட்டர் மற்றும் 18 முதல் 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை வரம்பு: ரூ.4.70 - ரூ.6.73 லட்சம்


Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்

3. ஹோண்டா சிட்டி e:HEV

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் தரும் செடான் மாடலாக ஹோண்டா சிட்டியின் ஹைப்ரிட் எடிஷன் உள்ளது.  இது 27.26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.  இதற்காக 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜின் ஆனது, நிலையான மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் 20 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை வரம்பு: ரூ.20 லட்சம்


Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்

2. டொயோட்டா ஹைரைடர்/ மாருதி க்ராண்ட் விட்டாரா

டொயோட்டா ஹைரைடர் மற்றும் மாருதி க்ராண்ட் விட்டாரா ஆகிய இரண்டு மாடல்களுமே, ARAI சான்றிதழ் அடிப்படையில் அதிக மைலேஜ் தரும் கார் மாடல்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளன. அதன்படி, இதில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் இன்ஜின் ஆனது, லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் 18 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே வழங்குவதாக பயனர்களின் கருத்துகள் தெரிவிக்கின்றன.



Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்

ஹைரைடர் விலை வரம்பு: ரூ.16.72 - ரூ.20.19 லட்சம்

க்ராண்ட் விட்டாரா விலை வரம்பு: ரூ.16.63 - ரூ.19.57 லட்சம்

1. மாருதி விக்டோரிஸ்

மாருதியின் இரண்டாவது மிட்-சைஸ் எஸ்யுவி ஆன விக்டோரிஸ், க்ராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடரில் இடம்பெற்றுள்ள அதே பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜினை பயன்படுத்துகிறது. மேற்குறிப்பிடப்பட்ட மாடல்களுக்கு நிகரான மொத்த எடையை கொண்டிருந்தாலும், விக்டோரிஸ் கூடுதல் எரிபொருள் செயல்திறனை கொண்டுள்ளது. இதன் மூலம் அதிக மைலேஜ் தரும் கார் மற்றும் அதிக மைலேஜ் தரும் எஸ்யுவி என பாராட்டப்படுகிறது. ARAI தரவுகளின்படி, லிட்டருக்கு 28.65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் 28 கிலோ மீட்டர் மைலேஜ் வரை வழங்கப்படுகிறது.

விலை வரம்பு: ரூ.16.38 - ரூ.19.99 லட்சம்


Highest Mileage Cars: விக்டோரிஸ், ஹைரைடர் 28KM, செலெரியோ 26KM உண்மையா? மைலேஜ், விலை விவரங்கள்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Embed widget