Upcoming Royal Enfield: ராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கப் போறீங்களா..? அடுத்து வரும் 4 புதிய மாடல்கள் இவைதான்..!
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சார்பில் நடப்பாண்டு இறுதிக்குள் வெளியாக உள்ள 4 புதிய பைக்குகளின் விவரங்களை இங்கு அறியலாம்.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சார்பில் நடப்பாண்டு இறுதிக்குள் வெளியாக உள்ள 4 புதிய பைக்குகளின் விவரங்களை இங்கு அறியலாம்.
ராயல் என்ஃபீல்ட்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து வருவதே, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய காரணமாகும். அந்த வரிசையில், நடப்பாண்டு தொடக்கத்தில் சூப்பர் மீட்டியர் 650 வாகனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதைதொடர்ந்து, மேலும் 4 புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
01. நியூ ஜென் புல்லட் - 350:
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நியூ ஜென் புல்லட் 350 மாடல் இருசக்கர வாகனத்தை, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில்-கூல்டு 349 சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக் விற்பனைக்கு வரும்போது, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடலில் மிகக்குறைந்த விலையில் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள் எனும் பெருமையையும் பெரும். இந்திய சந்தையில் இதன் விலை ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.6 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
02. ஹிமாலயன் 450:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 450 மாடல் மோட்டார் சைக்கிளும் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 450 சிசி லிக்விட் - கூலிங் மோட்டர் கொண்ட முதல் இந்திய இருசக்கர வாகனம் என்ற பெருமயை பெறுவதுடன், 4v தொழில்நுட்பமும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தைக்கு கொண்டு வரப்படும்போது இந்த பைக்கின் விலை, ரூ.2.6 லட்சத்திலிருந்து 2.7 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
03. காண்டினெண்டல் GT 650:
தற்போது சந்தையில் உள்ள காண்டினெண்டல் மாடல் பைக் மேம்படுத்தப்பட்டு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஸ்போர்டியர் லுக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் உடன், மெக்கானிக்கல் அம்சங்களும் இதில் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும்போது தான் இந்திய சந்தையில் அதன் விலை என்ன என்பது தெரிய வரும். காண்டினெண்டல் GT 650 பைக் மாடல் நவம்பர் 14ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
04. ஷாட்கன் 650:
நடப்பாண்டு வெளியாக உள்ள ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் மாடல்களின் பட்டியலில் கடைசியாக இருப்பது ஷாட்கன் 650 மாடல். சூப்பர் மீட்டியர் மாடலில் உள்ள அதே இன்ஜின் தான் ஷாட்கன் மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பைக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கான, நேரடி போட்டியாளர்கள் என யாரும் இல்லை. இதன் விலை ரூ.3.25 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.