Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale In Nov 2025: இந்த்ய ஆட்டோமொபைல் சந்தையில் நவமபர் மாத கார் விற்பனையில் எந்த மாடல் அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Car Sale In Nov 2025: இந்த்ய ஆட்டோமொபைல் சந்தையில் நவமபர் மாத கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நவம்பர் மாத கார் விற்பனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நவம்பர் மாத கார் விற்பனையானது, பயணிகள் வாகன விற்பனை எப்படி எஸ்யுவி பிரிவை நோக்கி சாய்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. அதே நேரத்தில் சில நீண்டகால ஹேட்ச்பேக்குகள் மற்றும் செடான்கள் இன்னும் தங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்கின்றன. அந்த வகையில் கடந்த நவம்பர் மாத விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
டாடா நெக்ச்ஸான் முதலிடம்:
கடந்த 2024ம் ஆண்டு நவம்பார் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த நவம்பரில் அதிக யூனிட்களை விற்பனை செய்த மாடாலாக தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது டாடா நெக்ஸான் ஆகும். இது 22,434 யூனிட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 46 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மாருதி சுசுகி டிசையர் உள்ளது. அதன்படி, 21,082 யூனிட்கள் விற்பனையான இந்த காம்பாக்ட் செடான் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 79 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
லிஸ்டில் மாஸ்காட்டும் மாருதி
ஒரு வருடம் முன்பு புத்தம் புதிய வடிவமைப்பு மற்றும் அதிக பிரீமியம் உட்புறத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை டிசையர், பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 19,733 யூனிட்களை விற்பனை செய்து, ஆண்டுக்கு ஆண்டு 34 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த ஹேட்ச்பேக் நாட்டின் மிகவும் அடையாளம் காணக்கூடிய மாடல்களில் ஒன்றாகத் தொடர்கிறத. மேலும் சமீபத்திய தலைமுறை கூடுதல் ஆர்வத்தைச் சேர்த்துள்ளது. டாடா மோட்டரின் பஞ்ச் 18,753 யூனிட்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது - இது 21 சதவீதம் உயர்வைக் காட்டுகிறது.
தொடரும் க்ரேட்டாவின் வேட்டை
மிட் சைஸ் SUV பிரிவில் ஹூண்டாய் க்ரேட்டா தனது வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. 17,344 யூனிட்டுகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததோடு 12 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த பிரிவு மிகவும் போட்டித்தன்மையுடன் மாறினாலும், க்ரேட்டாவின் அம்சங்கள், பவர்டிரெய்ன் வகை மற்றும் பிராண்ட் நம்பிக்கை ஆகியவற்றின் கலவையானது நிலையான மாதாந்திர எண்ணிக்கையைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. மாருதி சுசூகி எர்டிகா 16,197 யூனிட்களுடன் ஆறாவது இடத்தைப் பிடித்து 7 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் நடைமுறை பல்பயன்பாட்டு வாகனங்களுக்கான தேவை, குடும்பங்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே நிலையானதாக இருப்பதை உணர முடிகிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ, மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ் மற்றும் மாருதி சுசூகி வேகன் ஆர் ஆகியவை முறையே ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பிடித்தன.
அதாவது ஒரு மாடலாக டாடாடவின் நெக்ஸான் முதலிடத்தை பிடித்தாலும், முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் மாருதியின் கார் மாடல்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.
நவம்பர் 2025 கார் விற்பனை:
| ரேங்க் | மாடல் (YoY) | நவம்பர் 2025 விற்பனை | நவம்பர் 2024 விற்பனை |
|---|---|---|---|
| 1 | டாடா நெக்ஸான் (46%) | 22,434 | 15,329 |
| 2 | மாருதி சுசூகி டிசையர் (79%) | 21,082 | 11,779 |
| 3 | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் (34%) | 19,733 | 14,737 |
| 4 | டாடா பஞ்ச் (21%) | 18,753 | 15,435 |
| 5 | ஹூண்டாய் க்ரேட்டா (12%) | 17,344 | 15,452 |
| 6 | மாருதி சுசூஉகி எர்டிகா (7%) | 16,197 | 15,150 |
| 7 | மஹிந்த்ரா ஸ்கார்பியோ (23%) | 15,616 | 12,704 |
| 8 | மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ் (1%) | 15,058 | 14,882 |
| 9 | மாருதி சுசூகி வேகன் ஆர் (5%) | 14,619 | 13,982 |
| 10 | மாருதி சுசூகி விட்டாரா ப்ரேஸ்ஸா (-7%) | 13,947 | 14,918 |





















