மேலும் அறிய

TATA Motors: காருக்கு மட்டுமில்ல.. ட்ரக், பேருந்துகளின் விலையை கூட உயர்த்திய டாடா? எந்த மாடலுக்கு எவ்வளவு?

Tata Motors Price Hike: டாடா நிறுவனத்தின் கார்களை தொடர்ந்து பேருந்து மற்றும் ட்ரக்குகளின் விலையையும், ஜுலை 1ம் தேதி முதல் உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Tata Motors Price Hike: டாடா நிறுவனத்தின்பேருந்து மற்றும் ட்ரக்குகளின் விலை, ஜுலை 1ம் தேதி முதல் 2.5 சதவிகிதமாக உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

டாடா வாகனங்களின் விலை உயர்வு:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து வகையான வணிக வாகனங்களின் விலையும், ஜுலை 31ம் தேதி முதல் 2.5 சதவிகிதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டில் அந்நிறுவனம் அறிவித்துள்ள இரண்டாவது விலை உயர்வு இதுவாகும்.  உயர்ந்து வரும் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் இதர உள்ளீட்டுச் செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்வதற்காக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக டாடாவின் வணிக வாகன பிரிவு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வின் அளவு, மாடல் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 1 முதல் விலையுயர்வு அமல்:

 டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது வணிக வாகனங்கள் அனைத்திலும் திருத்தப்பட்ட விலைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. நிறுவனம் மாடல் வாரியான விலை மாற்றங்களை வெளியிடவில்லை, ஆனால் இந்த விலை உயர்வு வெவ்வேறு மாடல்கள் மற்றும் வகைகளுக்கு ஏற்ப மாறுபடும் என்று கூறியுள்ளது.  முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் , அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை மற்றும் பிற உள்ளீட்டுச் செலவுகளைக் காரணம் காட்டி, அந்நிறுவனம் தனது வணிக வாகனங்களின் விலையை 1.5% வரை உயர்த்தியிருந்தது. தற்போது அதே காரணத்தை குறிப்பிட்டு மேலும் 2.5 சதவிகித விலை உயர்வை அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் சிறிய வணிக வாகனங்கள், பிக்கப் ட்ரக்குகள், நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள், அத்துடன் பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வணிக வாகனங்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் வாகனங்களின் விலையும் உயர்வு:

முன்னதாக பயணிகள் வாகனங்களின் விலையும் வரும் ஜுலை 1ம் தேதி முதல் 1.5 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் பணவீக்க அழுத்தங்களே இந்த விலை உயர்வு நடவடிக்கைக்கு காரணம் என பயணிகள் வாகனத் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது. இந்த விலை அதிகரிப்பானது அந்நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்படும் இன்ஜின் (ICE) மாடல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் (EVs) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த காருக்கு எவ்வளவு விலை அதிகரிக்கும்?

இந்திய சந்தைக்கான டாடா ப்ராண்டின் பயணிகள் வாகன போர்ட்ஃபோலியோவில், தற்போது டியாகோ, டைகோர், பஞ்ச், நெக்ஸான், சியரா, கர்வ், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற மாடல்கள் உள்ளன. இவற்றுடன் இந்த பிராண்டில் டியாகோ EV, பஞ்ச் EV, நெக்ஸான் EV மற்றும் ஹாரியர் ஆகியவையும் உள்ளன. அதேவேளையில், சியரா EV-ஐ ஜூன் 30 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார்களின் விலை உயர்வானது 7 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 37 ஆயிரம் ரூபாய் வரையிலும் நீளக்கூடும். 

இதையும் படியுங்கள்: Mini Countryman C: லுக், ஸ்டைல், வசதிகள் எல்லாம் ஓகே.. விலை தான் கண்ண கட்டுது..! - மினி கண்ட்ரிமேன் C தேறுமா?

டாடா மோட்டார்ஸ் தவிர, பிஎம்டபிள்யூ இந்தியா, மெர்சிடிஸ்-பென்ஸ், மாருதி சுசூகி, ஹுண்டாய் மோட்டார் இந்தியா, நிசான் மோட்டார் இந்தியா மற்றும் பிற உற்பத்தியாளர்களும் சமீபத்தில் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன. இவற்றுள் மாருதி சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்கப்படும் தனது கார்களுக்கு ரூ.30,000 வரை விலை உயர்வை அறிவித்திருந்தது. இது கடந்த ஜூன் 1 முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
Kia Seltos: இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
Top Range Cars: டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்
டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்
Honda SUV: ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget