Synthetic Vs Mineral oil: சிந்தெடிக் Vs மினரல் ஆயில் - உங்கள் காருக்கு எது பெஸ்ட்? நல்ல செயல்திறனுக்கு எப்படி உதவும்?
Synthetic Vs Mineral oil: காரின் செயல்திறனை மேம்படுத்த சிந்தெடிக் மற்றும் மினரல் ஆயில்களில் எது சிறந்தது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Synthetic Vs Mineral oil: சிந்தெடிக் மற்றும் மினரல் ஆயில்கள் இடையேயான வித்தியாசம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
சிந்தெடிக் Vs மினரல் ஆயில்
வழக்கமான மினரல் அடிப்படையிலான ஆயிலுடன் ஒப்பிடும்போது, சிந்தெடிக் இன்ஜின் ஆயில் மிகச் சிறந்த லூப்ரிகண்ட் தன்மையை வழங்குகிறது. மினரல் இன்ஜின் ஆயில் கிட்டத்தட்ட முழுவதுமாக இயற்கையானது, ஆனால் சிந்தெடிக் ஆயில் என்பது கவனமாகச் செம்மைப்படுத்தப்பட்ட புராசஸ்களுடன் கூடிய வேதியியல் தயாரிப்பாகும். பெரும்பாலான சிந்தெடிக் ஆயில் ப்ராண்டுகளில் பாலிஆல்ஃபாஒலிஃபின் (PAO), சிந்தெடிக் எஸ்டர்கள் மற்றும் அல்கைலேட்டட் அரோமேட்டிக்ஸ் போன்ற செயல்திறனை மேம்படுத்தும் சேர்க்கைகள் அடங்கியுள்ளன. இயற்கையான ஆயிலின் மூலக்கூறுகளை விட சிந்தெடிக் ஆயிலின் மூலக்கூறுகள் அளவு மற்றும் வடிவத்தில் அதிக சீரான தன்மையைக் கொண்டுள்ளன.
சிந்தெடிக் Vs மினரல் ஆயில் - எது பெஸ்ட்?
உங்கள் இன்ஜினின் லூப்ரிகண்ட் செயல்பாடுகளுக்கு சிந்தெடிக் ஆயிலை பயன்படுத்த வல்லுநர்கள் பெரிதும் பரிந்துரைக்கின்றனர். சிந்தெடிக் ஆயில் மிக அதிக வெப்பத்திலும் கூட சீரான பாகுத்தன்மையைப் பராமரிக்கிறது. மேலும் இன்ஜினின் பெரும்பாலான தேய்மானம் ஸ்டார்ட்-அப் செய்யும் போது ஏற்படுவதால், இந்த முக்கியமான கட்டத்தில் அதிக வழுவழுப்புத்தன்மையை வழங்க உதவுகிறது. சிந்தெடிக் ஆயிலின் பயன்பாடு உங்கள் இன்ஜினுக்கு நீண்ட ஆயுள், அதிக செயல்திறன் மற்றும் மேம்பட்ட செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. சில சோதனைகள் சக்தியில் ஒரு சிறிய அதிகரிப்பையும் காட்டுகின்றன.
சிந்தெடிக் ஆயிலைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:
ரன்னிங்-இன் பீரியடில் வேண்டாம்: தேய்மானம் என்பது உண்மையில் ஒரு புதிய இன்ஜினுக்கு நல்லது. சிந்தெடிக் ஆயில் அதன் சிறந்த வழுவழுப்பான பண்புகளால், ரன்னிங்-இன் செயல்முறையைத் தடுக்கிறது, எனவே 10,000 – 15,000 கி.மீ. ஓடிய பிறகு சிந்தெடிக் ஆயிலை பயன்படுத்துவது சிறந்தது.
சரியான க்ரேட்: நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தின் உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் க்ரேடின் அடிப்படையில் உங்கள் இன்ஜின் ஆயிலைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உங்கள் உரிமையாளர் கையேடு 10W–40 க்ரேட் ஆயிலைப் பரிந்துரைத்தால், அதை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்ஜின் சுத்திகரிப்பு: வழக்கமான ஆயிலிலிருந்து சிந்தெடிக் ஆயில் பயன்பாட்டிற்கு மாறும் முன் இன்ஜினை முழுமையாக சுத்தப்படுத்துவது நல்லது. சில பழைய / அதிக மைலேஜ் ஓடிய இன்ஜின்கள் இன்ஜின் ஃப்ளஷிங்கை சரியாக ஏற்றுக்கொள்ளாது என்பதை நினைவில் கொள்ளவும், எனவே மெக்கானிக்கின் ஆலோசனையை பெறுவது நல்லது.
ஆயில் மாற்றத்திற்கான இடைவெளி?: குறைந்த சராசரி வேகம், நெரிசலான போக்குவரத்து மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகள் போன்ற இந்திய ஓட்டுநர் சூழல்கள் உங்கள் இன்ஜினுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கின்றன. எனவே சீரான இடைவெளியில் ஆயிலை மாற்றுவது நல்லது.
தரமான ஃபில்டர்: உயர்தரமான உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் ஆயில் ஃபில்டர்களை மட்டுமே பயன்படுத்துங்கள்,
டீசல் இன்ஜின்கள்: பெட்ரோல் இன்ஜின்களைப் போலவே டீசல் இன்ஜின்களும் சிந்தெடிக் ஆயிலால் பயனடைகின்றன. இருப்பினும், குறிப்பாக டீசல் இன்ஜின்களுக்கு, உங்கள் உற்பத்தியாளரால் பரிந்துரைக்கப்பட்ட சிந்தெடிக் ஆயிலின் தரத்துடன் ஒத்துப்போவது மிகவும் முக்கியம்.
விலை: சிந்தெடிக் ஆயிலின் விலை மினரல் ஆயிலை விட விலை அதிகம். இருப்பினும் சிந்தெடிக் ஆயிலின் பாதுகாப்பு நன்மை, அதன் விலைக்கு மிகவும் தகுதியானது என்று வலியுறுத்தப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















