மேலும் அறிய

EV Battery: இனி மணிக்கணக்கில் வெயிட் பண்ண வேண்டாம்.. மின்சார வாகன பேட்டரியை மாற்ற புது வசதி!

தமிழ்நாட்டில் மின்சார இருசக்கர மற்றும் கார்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போதைய இருசக்கர மின்சார வாகனங்களில் பேட்டரியை தனியே கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை மாற்றிக்கொள்ளும் மின்சார வாகன பேட்டரி மாற்றும் நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் மின்சார இருசக்கர மற்றும் கார்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. முன்பு இருசக்கரங்களுக்கு பேட்டரி உள் இணைத்து கொடுக்கப்பட்டிருந்ததால் அதனை ஒவ்வொரு முறையும் சார்ஜ் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. பெட்ரோல் நிலையங்கள் சார்ஜிங் ஸ்டேஷன் தனியாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய இருசக்கர மின்சார வாகனங்களில் பேட்டரியை தனியே கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருப்பதால் பலரும் மின்சார வாகனங்காள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னையில் உள்ள புறநகர் ரயில் நிலையங்களுக்கு தங்களுடைய மின்சார வாகனங்களில் வரும் பயணிகளுக்கு சிறப்பான வசதி ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது மின்சார வாகன பேட்டரி மாற்றும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்களுடைய வாகனங்களில் பேட்டரி தீர்ந்து போனால் சில நிமிடங்களிலேயே அதனை மாற்றிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்ட்ரல், எழும்பூர், பசுமைவழிச்சாலை, மந்தைவெளி, கோட்டூர்புரம், சிந்தாதிரிப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி, பரங்கிமலை, சைதாப்பேட்டை, பல்லாவரம், வில்லிவாக்கம் மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் வழக்கமாக பேட்டரி செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கும் நேரம் தவிர்க்கப்படுகிறது. சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை சில நிமிடங்களிலேயே  நாம் மாற்றிக்கொள்ள முடியும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த வசதியை மேற்கொள்ள 5 ஆண்டுகால ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு நல்ல பயனை அளிக்கும் என நம்பப்படுகிறது. 

இந்த முயற்சியால் ஆண்டுக்கு தெற்கு ரயில்வே சுமார் ரூ.53.43 லட்சம் வருவாய் ஈட்ட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சார்ஜ் பாயின்ட் ஆபரேட்டர்கள், மொபைல் செயலிகள் மூலம் இந்தச் சேவையை அணுக முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இம்முயற்சி கைகொடுக்கும் எனவும் தெற்கு ரயில்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இந்த வசதிகளுக்கு மிகக் குறைந்த இடமே தேவைப்படும் என்றும், இது பயணிகளின் போக்குவரத்தைப் பாதிக்காது  என்றும் இதுதொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Kia Seltos: வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget