Renault Triber: மாருதிக்கு விபூதி அடித்த ரெனால்ட் - ரூ.6.29 லட்சத்திற்கே 7 சீட்டர், மாடன் டிசைன், 6 ஏர்பேக்குகள்...
Renault Triber Facelift 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட, ட்ரைபர் கார் 7 சீட்டர் கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Renault Triber Facelift 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட, ட்ரைபர் காரின் தொடக்க விலை ரூ.6.29 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் ட்ரைபர் 7 சீட்டர்:
குடும்பமாக பயணிக்க கிளாசியாகவும், மலிவு விலையிலும் ஒரு காரை தேடுகிறீர்களா? ரெனால்ட் நிறுவனம் வெகுஜன மாடலாக அப்கிரேட் செய்யப்பட்ட ட்ரைபர் காரை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் கேட்டதுமே ஆச்சரியப்படுத்தும் வகையில், வெறும் 6.29 லட்சத்தை தொடக்க விலையுடன். புதிய எடிஷனானது ப்ரீமியம் ஸ்டைலிங், கலை நயமிக்க தோற்றம் மற்றும் மலிவு விலையில் உயர்தர பாதுகாப்பு அம்சங்களை கொண்டு, பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற தேர்வாக விளங்குகிறது. இதன் போட்டித்தன்மை மிக்க விலை நிலவரம், பல முன்னணி நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் விதமாக உள்ளது.
ரெனால்ட் ட்ரைபர் - வெளிப்புற அம்சங்கள்
புதிய ட்ரைபரின் வெளிப்புறத்தில் திருத்தப்பட்ட க்ளாஸி ப்ளாக் ஃப்ரண்ட் க்ரில், கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப்ஸ், பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் இணைக்கப்பட்ட மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்பு விளக்குகள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதிக காற்றை உள் இழுப்பதற்கு ஏற்ப பம்பர் மாற்றப்பட்டுள்ளது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஃபாக் லேம்ப்களும் இடம்பெற்றுள்ளன. 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், க்ளோஸ் பிளாக் டோர் ஹேண்டில்கல் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், காரின் ஒட்டுமொத்த அளவுகள் மற்றும் வெளிப்புற தோற்றமானது எந்தவித பெரிய மாற்றத்தையும் பெறாமல், கடந்த எடிஷனை போன்றே தொடர்கிறது. இருப்பினும், புத்துயிர் பெற்ற அனுபவத்தை வழங்குவதற்காக ஷேடோ க்ரே, ஆம்பர் டெர்ரகோடா மற்றும் ஜன்ஸ்கர் ப்ளூ ஆகிய புதிய வண்ண விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Renault launches the #Triber at Rs 6.29 lakhs. 6 airbags standard across all models. Top model goes for Rs 8.64 lakhs pic.twitter.com/dhwyWggga9
— Chetan Bhutani (@BhutaniChetan) July 23, 2025
ரெனால்ட் ட்ரைபர் - உட்புற அம்சங்கள்
உட்புறத்தில் மூன்று வரிசை இருக்கை அமர்வை கொண்ட இந்த எம்பிவி வாகனமானது, புதிய அப்ஹோல்ட்ஸ்ரி பேட்டர்னை கொண்டுள்ளது. சற்றே திருத்தப்பட்ட டேஷ்போர்ட் அமைப்பையும் பெற்றுள்ளது. எல்இடி இண்டீரியர் லைட்டிங், திருத்தப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகிய புதிய அம்சங்களை பெற்றுள்ளது. இதுபோக ஏற்கனவே இருக்கும், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், ஆட்டோமேடிக் க்ளைமேடிக் கண்ட்ரோல் ஆகியவை அப்படியே தொடர்கின்றன. ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், புஷ் பட்டன் ஸ்டார்ட்?ஸ்டாப் ஆகிய அம்சங்களும் நிறைந்துள்ளன. 5/6/7 சீட்டர் வசதியை கொண்ட இந்த காரானது 625 லிட்டர் பூட் வசதியை கொண்டுள்ளது.
ரெனால்ட் ட்ரைபர் - பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பு பிரிவில் தான் ட்ரைபர் கார் மாடல் அதிகளவில் அப்க்ரேட் பெற்றுள்ளது. அதன்படி, 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், ஃப்ரண்ட் பார்கிங் சென்சார்ஸ் ஆகியவை புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆண்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம், ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், கீலெஸ் எண்ட்ரி, ISOFIX இருக்கைகள் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் அப்படியே தொடர்கிறது. தற்போது வரை இந்த புதிய எடிஷன் பாதுகாப்பு பரிசோதனை மேற்கொள்ளவில்லை. ஆனால், பழைய எடிஷன் பெற்ற 4 ஸ்டார்களை காட்டிலும், இந்த முறை கூடுதல் சிறப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் ட்ரைபர் - இன்ஜின் விவரங்கள்
இன்ஜின் அடிப்படையில் புதிய ட்ரைபர் எந்தவித மாற்றத்தையும் பெறவில்லை. 1 லிட்டர் 3 சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினையே இந்த கார் தொடர்ந்து பயன்படுத்துகிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் இணைந்து, 72hp 96Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை இந்த இன்ஜின் கொண்டுள்ளது. இது லிட்டருக்கு சராசரியாக 17 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அதிபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடும். எரிபொருள் திறன் சேமிப்புக்காக, கூடுதலாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட CNG கிட் விருப்பமும் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
ரெனால்ட் ட்ரைபர் - விலை விவரங்கள்
உள்நாட்டு சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் 5 வேரியண்ட்களில், ரூ.6.29 லட்சத்தில் தொடங்கி, ரூ.9.17 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி,
- ட்ரைபர் அதெண்டிக் - ரூ.6.29 லட்சம்
- ட்ரைபர் எவொலுஷன் - ரூ.7.25 லட்சம்
- ட்ரைபர் டெக்னோ - ரூ.8 லட்சம்
- ட்ரைபர் எமோஷன் - ரூ.8.65 லட்சம்
- ட்ரைபர் அமோஷன் AMT - ரூ.9.17 லட்சம்
டூயல் டோன் வண்ண விருப்பங்களை பெற விரும்புவர்கள் கூடுதலாக 23 ஆயிரம் ரூபாய் என்ற கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும். ட்ரைபருக்கு 3 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இது 7 ஆண்டுகளுக்கும் நீட்டித்து கொள்ளலாம்.
ரெனால்ட் ட்ரைபர் - போட்டியாளர்கள்
உள்நாட்டு சந்தையில் மாருதி சுசூகி எர்டிகா, மாருதி சுசூகி XL6, கியா காரென்ஸ் கிளாவிஸ் ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. குறிப்பாக இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி நிறுவனத்தின் எர்டிகாவை காட்டிலும், இதன் தொடக்க விலை ரூ.2.6 லட்சம் குறைவாகும். XL6-ன் தொடக்க விலையை காட்டிலும் சுமார் ரூ.5.5 லட்சம் குறைவாகும். அதன்படி, செயல்பாடு மற்றும் பிரீமியம் அம்சங்களை கொண்டு இனி இந்தியாவில் மலிவான 7 இருக்கைகள் கொண்ட காராக மட்டுமின்றி, இந்த பிரிவில் சிறந்த கார்களில் ஒன்றாகவும் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் உருவெடுத்துள்ளது.





















