Renault SUV: EV டூ ஹைப்ரிட், 6 லட்ச ரூபாய் காரில் 4 எரிபொருள் ஆப்ஷன்கள் - ரெனால்டின் புதிய காம்பேக்ட் மாடல்
Renault Bridger SUV Powertrain: ரெனால்ட் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆன ப்ரிட்ஜர் மாடலில் 4 வகையான எரிபொருள் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Renault Bridger SUV Powertrain: ரெனால்ட் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி ஆன ப்ரிட்ஜர் மாடலில் 4 வகையான எரிபொருள் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ரெனால்ட் ப்ரிட்ஜர் எஸ்யுவி
மேம்படுத்தப்பட்ட மூன்றாவது தலைமுறை டஸ்டர் கார் மாடல் மூலம், இந்திய சந்தையில் தனது பிரமாண்டமாக கம்பேக்கை ரெனால்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. உள்நாட்டு சந்தையில் எதிர்காலத்தை தீவிரமாக திட்டமிட்டுள்ள இந்த ஃப்ரான்ஸ் நிறுவனம், 7 புதிய கார் மாடல்கள் மற்றும் இன்ஜின், ஹைப்ரிட், மின்சார எடிஷன் மற்றும் சிஎன்ஜி பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை ஆதரிக்கக் கூடிய 2ஆர்கிடெக்ட்சர் அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய சந்தைக்காக ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ள 7 கார் மாடல்களில் இன்று ப்ரிட்ஜர் எஸ்யுவி ஆகும். கடந்த மார்ச் மார்ச் மாதம் காட்சிப்படுத்தப்பட்ட காம்பேக்ட் எஸ்யுவி ஆனது, ப்ராண்டின் கரடுமுரடான சப்-4 மீட்டர் எஸ்யுவி ஆக இது இருக்கும் என்பதை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரெனால்டின் கைகர் மற்றும் டஸ்டர் கார் மாடல்களுக்கு இடையே இது நிலைநிறுத்தப்பட உள்ளது.
4 வகையான பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள்:
டஸ்டர் கார் மாடலை போன்றே, புதிய ப்ரிட்ஜர் மாடலும் RGMP எனப்படும் ரெனால்ட் க்ளோபல் மாடுலர் ப்ளாட்ஃபார்மிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரெனால்ட் மற்றும் கூகுள் நிறுவனத்தால் இணைந்து தயாரிக்கப்பட்ட ஃபீட்சரிங் & EE (எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ்) ஆர்கிடெக்ட்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ப்ளாட்ஃபார்மானது காரின் வடிவமைப்பில் எந்த சமரசமும் இல்லாமல், முழுமையான மின்மயமாக்கல் மற்றும் பலவிதமான பவர்ட்ரெயின்களை (இன்ஜின், ஹைப்ரிட், மின்சார எடிஷன் மற்றும் சிஎன்ஜி) இடம்பெறச் செய்ய வழிவகுக்கிறது என ரெனால்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை கருத்தில்கொண்டால் இந்திய சந்தைக்கான ப்ரிட்ஜர் எஸ்யுவி இன்ஜின், ஹைப்ரிட், மின்சார எடிஷன் மற்றும் சிஎன்ஜி ஆகிய எரிபொருள் ஆப்ஷன்களில் அறிமுகபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆனது அதன் பிரிவில் முழுமையான செயல்திறனை வழங்கும் கார் மாடலாக உருவெடுக்கக் கூடும்.

ரெனால்ட் ப்ரிட்ஜர் எஸ்யுவி - டிசைன், அம்சங்கள்
இந்திய சந்தையில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் எந்தவொரு காரை போன்றும் இல்லாமல், ப்ரிட்ஜரின் டிசைன் தனித்துவமாக உள்ளது. நிமிர்ந்த மற்றும் பாக்ஸி தோற்றத்தையும், ரக்கட் ஆன முன்பக்கத்தையும் கொண்டுள்ளது. முகப்பில் பெரிய கருப்பு நிற க்ரில், அகலமான ஏர் டேம், மையப்பகுதியில் ஒளிரூட்டப்பட்ட ரெனால்ட் பேட்ஜ் உடன் கூடிய எல்இடி விளக்குகள், மற்றும் கட்டுமஸ்தான ஸ்கிட் ப்ளேட் இடம்பெற்றுள்ளன.
பக்கவாட்டில் கரடுமுரடான 18 இன்ச் சதுர வடிவ ஸ்போக் அலாய் வீல்கள், சதுர வடிவிலான ஃபெண்டர்கள்,வீல் ஆர்ச்சஸ் மற்றும் C பில்லருடன் ஒருங்கிணைக்கப்பட்ட பின்புற கதவு ஜேண்டில்கள் ஆகியவை உள்ளன. ப்ரிட்ஜரின் பின்புறத்தில் கூர்மையாக வடிவமைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், பம்பருடன் இணைக்கப்பட்ட ஸ்கிட் ப்ளேட்கள் மற்றும் பின்புற கதவில் பொருத்தப்பட்ட கூடுதல் சக்கரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த காம்பேக்ட் எஸ்யுவி ஆனது செக்மெண்டிலேயே அதிகபட்ச 200 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் 400 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்ட மாடலாக இருக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவீடுகள் அடிப்படையில் சிறியது என கூறப்பட்டாலும், விசாலமான இடவசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரெனால்ட் ப்ரிட்ஜர் எஸ்யுவி - விலை, வெளியீடு
அடுத்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள ப்ரிட்ஜர் மாடலின் விலையானது, 6 லட்சத்தில் தொடங்கி 10 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயத்தை பெறும் என கூறப்படுகிறது. இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவி ஆனது உள்ளூர் சந்தையில் மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹுண்டாய் வென்யு, கியா சோனெட் மற்றும் ஸ்கோடா கைலாக் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















