மேலும் அறிய

Mercedes-Benz GLS: போடு வெடிய.. இந்திய சந்தைக்கு வந்தது புதிய மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்.. விலை இவ்வளவா?

Mercedes-Benz GLS: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவவனத்தின் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிப்ட் மாடல், நடப்பாண்டு இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் முதல் காராக அறிமுகமாகியுள்ளது.

Mercedes-Benz GLS: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவவனத்தின் ஜிஎல்எஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் காரின் விலை,  இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் ஒரு கோடியே 32 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Mercedes-Benz GLS கார் அறிமுகம்:

Mercedes-Benz GLS 2024 ஃபேஸ்லிப்ட்  மாடல் இந்திய சந்தையில் ஒரு கோடியே 32 லட்ச ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தலைமுறை GLS மாடலுக்கு இது இடைக்கால புதுப்பிப்பாகும். GLS 450 எனப்படும்  பெட்ரோல் வேரியண்டின் விலை ஒரு கோடியே 32 லட்ச ரூபாயாகவும், டீசல் வேரியண்டான GLS 450d விலை ஒரு கோடியே 37 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று இருக்கை வரிசைகளை கொண்ட இந்த எஸ்யுவி மாடலானது சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. 

வடிவமைப்பு & வெளிப்புற அம்சங்கள்:

பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில் இடம்பெற்றுள்ள முக்கிய புதிய அம்சமாக அதில் இடம்பெற்றுள்ள கிரில் கருதப்படுகிறது. பழைய மாடலில் இரண்டு அடுக்குகள் கொண்ட இருந்த நிலையில், புதிய மாடலில் அது 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பகல் நேரங்களிலும் எரியும் விளக்கு, பின்புற டெயில்-லைட்களில் ஒரு புதிய பிளாக் பேட்டர்ன் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட முன் பம்பர் ஆகியவையும் கவனம் ஈர்க்கின்றன. GLS ஃபேஸ்லிப்ட் 21-இன்ச் அலாய் வீல்களுடன் ஐந்து வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது. அதாவது அப்சிடியன் பிளாக், ஹைடெக் சில்வர், சோடலைட் ப்ளூ, செலினைட் கிரே மற்றும் போலார் ஒயிட் ஆகிய நிறங்களில் இந்த கார் மாடல் விற்பனைக்கு வருகிறது.

உட்புற மாற்றங்கள் & அம்சங்கள்:

GLS ஃபேஸ்லிப்ட் கருப்பு, பழுப்பு மற்றும் பிரவுன் ஆகிய மூன்று உட்புற அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இவை அனைத்தும் ஃபாக்ஸ் லெதரில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஒரு புதிய ஸ்டீயரிங் வீலும் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஹாப்டிக் பின்னூட்ட பொத்தான்களையும், சமீபத்திய MBUX அமைப்பையும் கொண்டிருக்கிறது. 5.2 மீட்டர் நீளம் மற்றும் 1.96 மீட்டர் அகலத்தில், GLS என்பது ஒரு பெரிய வாகனமாக காட்சியளிக்கிறது. அதற்கு உதவும் வகையில் தான் புதிய 360-டிகிரி கேமரா இடம்பெற்றுள்ளது. ஆடம்பர SUV அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஏர் சஸ்பென்ஷனில் சவாரி செய்வதோடு ADAS செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.  சூடான மற்றும் குளிரூட்டப்பட்ட இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், ரியர் சீட் கம்ஃபோர்ட் பேக்கேஜ் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.  இருக்கையின் தலைப்பகுதிக்கான கட்டுப்பாடுகள், இடத்தை அதிகரிக்க முன் இருக்கையின் கட்டுப்பாடுகள், மின்சார சன்பிளைண்ட்கள், இரண்டு 11.6-இன்ச் பொழுதுபோக்கு திரைகள் மற்றும் இந்த அம்சங்களைக் கட்டுப்படுத்த கூடுதல் டேப்லெட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

இன்ஜின் விவரங்கள்:

Mercedes-Benz GLS ஃபேஸ்லிப்ட் இரண்டு பவர்டிரெய்ன்களின் ஆப்ஷனை வழங்குகிறது. அதன்படி, இதில் இடம்பெற்றுள்ள  3.0-லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது 381hp மற்றும் 500Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அதோடு,  3.0-லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆனது 367hp மற்றும் 700Nm ஆற்றலை உருவாக்குகிறது. இரண்டு கார்களும் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.   ஹைப்ரிட் சிஸ்டத்தின் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் (ISG) கூடுதல் 20hp ஊக்கத்தையும் 200Nm டார்க்கையும் வழங்குகிறது. நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்ப 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை GLS பயன்படுத்துகிறது. ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட Mercedes-Benz GLS மாடலானது மற்ற 7-சீட்டர் சொகுசு SUVகளான BMW X7 (ரூ. 1.27 கோடி), வால்வோ XC90 (ரூ. 98.85 லட்சம்) மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி (ரூ. 95.65 லட்சம்) ஆகியவற்றுக்குப் போட்டியாக  அமைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget