மேலும் அறிய

Maruti Suzuki: மாருதியின் ஃபேன் ஃபேவரட் மாடல்களின் விலை உயர்வு - எந்த காருக்கு எவ்வளவு? EV, ஹேட்ச்பேக்

Maruti Suzuki Updated Price List: ஸ்விஃப்ட் தொடங்கி இ-விட்டாரா வரையிலான, கார் மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என, மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

Maruti Suzuki Updated Price List:  ஸ்விஃப்ட் தொடங்கி இ-விட்டாரா வரையிலான, கார் மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என, மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்விஃப்ட் காரின் விலையை உயர்த்திய மாருதி:

மூலப் பொருட்கள் போன்ற உள்ளீட்டு செலவினங்கள் காரணமாக, தங்களது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன்படி, ப்ராண்ட் சார்பில் விற்பனை செய்யப்படும் வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பிக்கை பெற்ற ஹேட்ச்பேக் கார் மாடலான, ஸ்விஃப்டின் விலையை இந்தோ-ஜப்பான் நிறுவனம் உயர்த்தியுள்ளது.  அதன்படி இந்த காரின் VXi CNG, VXi (O) CNG மற்றும் ZXi CNG வேரியண்ட்களின் விலை 7 ஆயிரத்து 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் - புதிய விலை வரம்பு

இதனால் ஸ்விஃப்டின் சிஎன்ஜி எடிஷனின் தொடக்க விலை 7 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும் அடிப்படை வேரியண்டின் தொடக்க விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.5.79 லட்சமாக அப்படியே தொடர்கிறது. மேற்குறிப்பிடவற்றை தவிர மற்ற அனைத்து வேரியண்ட்களின் விலையும் நான்காயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் கார் மாடலின் விலை வரம்பானது ரூ.5.79 லட்சத்தில் தொடங்கி ரூ.8.84 லட்சம் வரை நீள்கிறது. இந்த காரானது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களில் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடட் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எண்ட்ரி லெவல் காரை வாங்க விரும்புவோருக்கான பிரதான தேர்வாக உள்ள ஸ்விஃப்ட் மாடலானது, உள்ளூர் சந்தையில் ஹுண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ், டாடா டியாகோ மற்றும் பலேனோ ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

இ-விட்டாரவின் விலையை உயர்த்திய மாருதி

நடப்பாண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி நிறுவனத்தின் முதல் மின்சார காரான, இ-விட்டாராவின் விலை முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது குறிப்பிட்ட சில வேரியண்ட்களுக்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம், எண்ட்ரி லெவல் வேரியண்ட்களில் விலையில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. அதிகபட்சமாக டாப் வேரியண்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என சில வாரங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Upcomomg 7 Seater: இனிமே எல்லாமே 7 சீட்டர் மயம் தான்..! மொத்தமா 9 ப்ராண்ட்கள், ஹைப்ரிட், EV, டர்போ..! முழு லிஸ்ட்

ரூ.20 லட்சத்தை கடந்த விலை வரம்பு:

49KWh பேட்டரி பேக்கை கொண்ட  அடிப்படை டெல்டா வேரியண்டின் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.15.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை அப்படியே தொடர்கிறது.  அதேநேரம் பெரிய பேட்டரி பேக்கை கொண்ட டாப் வேரியண்ட்களின் விலை மிகப்பெரிய திருத்தத்தை கண்டுள்ளது. அவற்றின் விலை 20 லட்சத்தை கடந்துள்ளது. டாப் வேரியண்ட்கள் 61KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.  இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 543 கிலோ மீர்ரர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் கனெக்டட் கார் டெக்னாலஜி, டூயல்-ஸ்க்ரீன் அமைப்பு, ADAS செயல்பாடுகள் மற்றும் விரிவான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது ஹுண்டாய் க்ரேட்டா, டாடா கர்வ், மஹிந்த்ரா BE 6, MG நிறுவனத்தின் ZS EV மற்றும் விண்ட்சர் ஆகிய மின்சார கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
Kia Seltos: இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
Top Range Cars: டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்
டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்
Honda SUV: ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget