மேலும் அறிய

Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு

Grand Vitara Benefits: மாருதி சுசுகி நிறுவனத்தின் டாப் எஸ்யூவி காரான கிராண்ட் விதாராவிற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 100 ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், அதன் ஹைப்ரிட் எஸ்யூவி-யான கிராண்ட் விதாரா காருக்கு 1.93 லட்சம் வரை பலன்களை அறிவித்துள்ளது. நெக்சா மூலம் விற்கப்படும் இந்த மாடலுக்கான பலன்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

கிராண்ட் விதாராவிற்கான சலுகைகள்

மாருதி சுசுகி அதன் நெக்சா மாடலான கிராண்ட் விதாராவிற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 100 ரூபாய் வரை பலன்களை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் சலுகையை அறிவித்துள்ளது. இதில், ரொக்கத் தள்ளுபடி, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், ஸ்கிராப்பேஜ் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகை ஆகியவை அடங்கும்.

மேலும், இந்த காருக்கு தற்போது 3 வருடங்கள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் வாரண்ட்டி வழங்கப்படுகிறது. அதோடு, ப்ரெஸ்ஸா காரை கொடுத்து கிராண்ட் விதாரா சிக்மா மாடல் காரை எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு, மாதம் 9,999 ரூபாய் இஎம்ஐ வரும் வகையிலான ஃபைனான்ஸ் சலுகையும் உள்ளது. இதற்கு, 9.5 சதவீத இன்ட்ரெஸ்ட் ரேட்டுடன் பலூன் ஃபைனான்ஸ் என்ற புதிய இஎம்ஐ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிராண்ட் விதாராவின் சிறப்புகள்

மாருதி சுசுகி கிராண்ட் விதாராவில், லெவல்-2 ADAS அம்சங்களின் தொகுப்பை பெற்று, இதனை பெறும் மாருதி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஏனெனில் கீழ் கிரில் முன் பார்க்கிங் சென்சார்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் மற்றும் ஹில் ஹோல்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இதுபோக,  9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட்டில், ஆட்டோ ப்யூரிஃபை உடன் கூடிய PM2.5 டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா,  பார்க்கிங் சென்சார், டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், 8 அட்ஜெட்மென்ட்டுகளுடன் கூடிய எலெக்ட்ரிக் ட்ரைவர் சீட், இவி மோட், 17 இஞ்ச் மெஷின்ட் அலாய் சக்கரங்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

இன்ஜின், விலை விவரங்கள்

இந்த 7 சீட்டர் காரில், பவர்டிரெய்னைப் பொறுத்தவரை, தற்போது விற்பனையில் உள்ள 5 சீட்டர் எடிஷனில் இருப்பதை போன்றே தொடர்கிறது. அதன்படி,  FWD மற்றும் AWD உடன் 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். ஐந்து-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது ஆறு-ஸ்பீட் டார்க் மாற்றி உள்ளிட்ட டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் விற்பனைக்கு வரலாம். CVT உடன் வேலை செய்யும் 1.5-லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கும்.

நிறுவன குறிப்புகளின்படி மைலேஜ் விவரங்கள்...

பெட்ரோல் MT: ஒரு லிட்டருக்கு சுமார் 18-20 கிலோ மீட்டர்கள்
பெட்ரோல் AT: ஒரு லிட்டருக்கு சுமார் 17-19 கிலோ மீட்டர்கள்
ஹைப்ரிட் eCVT: 25-28 kmpl மைலேஜ்

இந்த காரின் விலை, 11.42 லட்சத்தில் தொடங்கி, டாப் வேரியன்ட் 20.68 எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கின்றன.

தலைப்பு செய்திகள்

Hero Xtreme 250R Vs KTM 250 Duke: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R-ஆ.? கேடிஎம் 250 ட்யூக்கா.? விலை, செயல்திறன், சிறப்பம்சங்களில் எந்த பைக் சிறந்தது.?
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R-ஆ.? கேடிஎம் 250 ட்யூக்கா.? விலை, செயல்திறன், சிறப்பம்சங்களில் எந்த பைக் சிறந்தது.?
Bajaj E Scooters: ஒரே சார்ஜில் 151 கி.மீட்டர் மைலேஜ்.. பஜாஜ் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, மைலேஜ் எப்படி?
Bajaj E Scooters: ஒரே சார்ஜில் 151 கி.மீட்டர் மைலேஜ்.. பஜாஜ் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, மைலேஜ் எப்படி?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் என்ன பிளஸ்? ஓர் ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் என்ன பிளஸ்? ஓர் ஒப்பீடு

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

Embed widget