மேலும் அறிய

Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்

Indias Cheapest Car: நாட்டின் மலிவான கார் மாடலை மீண்டும் கொண்டு வரவும், குறிப்பாக மின்சார எடிஷனில் களமிறக்கவும் டாடா நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம்.

Indias Cheapest Car: நாட்டின் மலிவான கார் மாடலை மின்சார எடிஷனில் களமிறக்கும் டாடாவின் திட்டம் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நாட்டின் மலிவான கார் மாடல்:

முதல்முறையாக கார் வாங்குபவர்களில் பெரும்பாலானோர், மலிவு விலை மாடலையே தேர்வு செய்வார்கள். முந்தையை காலத்தில் 10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் மிகவும் சொற்பமான ஆப்ஷன்களே உள்ளூரில் இருந்தன. ஆனால், தற்போது வாடிக்கையாளர்களின் பலதரபட்ட தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான மாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில், நாட்டின் முக்கிய கார் உற்பத்தியாளரான டாடா, ஒருகாலத்தில் நாட்டின் மிகவும் மலிவு விலை காராக இருந்த மாடலை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக டாடா உள்ளிட்ட பல்வேறு தரப்பிடமிருந்து இதுவரை கிடைத்த தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடா நானோ மீண்டும் வருகிறதா?

வெறும் ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் நாட்டின் மிகவும் மலிவான கார் மாடலாக அறிமுகமான, டாடா நானோவின் விற்பனை மற்றும் உற்பத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டது.  ஆனாலும் வாகன ஆர்வலர்கள் இடைஎயே இந்த மாடல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பேசப்படுகிறது.  இந்நிலையில் தான் நானோ மீண்டும் வரக்கூடும் என்பதை உணர்த்தும் வகையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பல படங்கள் இணையத்தில் அவ்வப்போது பரவுவதை நாம் காண்கிறோம். இருப்பினும், டாடா மோட்டார்ஸ் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.  ஆனால், அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டாடா மோட்டார்ஸின் இந்திய வடிவமைப்புத் தலைவரான அஜய் ஜெயினிடம், நானோ மீண்டும் சந்தைக்கு வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “முயற்சி செய்து பார்ப்போம். நானோ இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்த ஒரு நம்பமுடியாத புதுமையான கார். நானோவை மீண்டும் அந்த வரைபடத்தில் இடம்பெறச் செய்வது மகிழ்ச்சி அளிக்கும். நானோ மீண்டும் சந்தைக்கு வந்தால், அது அந்த ஹேட்ச்பேக்கின் மின்சார எடிஷனாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இது தனது தனிப்பட்ட விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டாடா நானோ கவனத்தை ஈர்க்குமா?

அக்காலத்தில் 'நாட்டின் மலிவான கார்' என்று அழைக்கப்பட்டது தான் நானோ எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக இருந்தது. அது நான்கு சக்கர வாகன உரிமையை எளிதாக்கிய போதிலும், பல வாங்குபவர்கள் நானோவிற்குப் பதிலாக பெரிய ஹேட்ச்பேக் கார்களைத் தேர்ந்தெடுத்ததால், டாடாவால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இருப்பினும், தற்போது எம்ஜி கோமட் போன்ற சில சிறிய/மைக்ரோ கார்கள் சந்தையில் உள்ளன. மேலும் வின்ஃபாஸ்ட் விஎஃப்3-ம் மாடலும் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. நானோ என்ற பெயரை மீண்டும் கொண்டு வருவது, இந்த சர்வதேச வாகன உற்பத்தியாளர்களுக்கு டாடா அளிக்கும் பதிலாக இருக்கலாம். இது சாத்தியமா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

நானோ என்ற பெயர் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், அது மீண்டும் உலகின் மலிவான காராக இருக்காது என்பதை முதலில் உணர வேண்டும். பெட்ரோல் இன்ஜினில் இயங்குவதற்குப் பதிலாக, பல நவீன அம்சங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒரு மின்சாரக் காராக சந்தைப்படுத்தப்படலாம். ஒருவேளை நானோ EV வெளிவந்தால், அது ஜெயம் நியோவின் 17 kWh பேட்டரி பேக்குடன் சுமார் 200 கி.மீ. தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: Nissan SUV: இனி பேச்சே இல்லை..! 36KM மைலேஜ் வழங்கும் ஜப்பான் எஸ்யுவி - 1980KM ரேஞ்ச், இந்தியாவில் எப்படி?

டாடா நிறுவனம் டியாகோ EV-யின் அதே அணுகுமுறையை நானோவிலும் கையாளக்கூடும். அதாவது, மிகவும் அத்தியாவசியமான அம்சங்களை மட்டுமே கொண்ட ஒரு நேர்த்தியான உட்புறத்தை அது வழங்கும். இதனால் நானோ EV ஆனது எம்ஜி கோமட் போன்ற கார்களுக்குப் போட்டியாக இருப்பதுடன், நாட்டில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை மின்சார கார்களில் ஒன்றாக விலையை நிர்ணயம் பெறலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏன் பிளாப் ஆனது MG Astor? விற்பனை நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள்
ஏன் பிளாப் ஆனது MG Astor? விற்பனை நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள 4 முக்கிய காரணங்கள்
காரில் ADAS வேணுமா? மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 சூப்பர் பட்ஜெட் கார்கள் லிஸ்ட்
காரில் ADAS வேணுமா? மலிவான விலையில் கிடைக்கும் டாப் 10 சூப்பர் பட்ஜெட் கார்கள் லிஸ்ட்
அறிமுகமாகியது ஹீரோவின் அப்டேட் வெர்சனான Hero Xtreme 160R 4V & Xtreme 250R
அறிமுகமாகியது ஹீரோவின் அப்டேட் வெர்சனான Hero Xtreme 160R 4V & Xtreme 250R
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
29 கி.மீட்டர் மைலேஜ்... 8 வருட பேட்டரி வாரண்டி.. அறிமுகமாகியது Renault Duster Hybrid ! விலை இவ்ளோதானா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget