Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
Diwali 2025 Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டு தீபாவளியை ஒட்டி, அறிமுகமாக உள்ள புதிய கார் மாடல்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Diwali 2025 Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டு தீபாவளியை ஒட்டி, அறிமுகமாக உள்ள புதிய கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தீபாவளி சீசன் - வரிசை கட்டும் புதிய கார்கள்
தீபாவளி சீசன் நெருங்கிக் கொண்டுள்ளது. இந்த விழாக்கால கொண்டாட்டத்தை வணிகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளன. உள்நாட்டில் எஸ்யுவி கார்களுக்கு நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முன்னணி நிறுவனங்களான மாருதி, ஹுண்டாய், டாடா, மஹிந்திரா மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட கார்களை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளன. இதில் காம்பேக்ட் தொடங்கி மிட்-சைஸ் எஸ்யுவிக்கள் வரை அடங்கும். அந்த கார்களின் விவரங்களை இங்கே அறியலாம்.
தீபாவளிக்கு வெளியாகும் புதிய எஸ்யுவிக்கள்:
| கார் மாடல் | உத்தேச வெளியீட்டு தேதி |
| மஹிந்திரா பொலேரோ நியோ ஃபேஸ்லிஃப்ட் | ஆகஸ்ட் - 15, 2025 |
| மாருதி எஸ்குடோ | செப்டம்பர் -3, 2025 |
| புதிய தலைமுறை ஹுண்டாய் வென்யு | அக்டோபர் |
| டாடா ப்ஞ்ச்/பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட் | அக்டோபர் |
| டாடா சியாரா | அக்., - நவம்பர் |
| ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் | செப்டம்பர் - அக்டோபர் |
1. மஹிந்திரா பொலேரோ நியோ ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்திரா நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பொலேரோ நியோ சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதேநாளில், புதிய ஃப்ரீடம் NU பிளாட்ஃபார்ம் மற்றும் 4 புதிய SUV கார்களுக்கான கான்செப்ட்களையும் அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த காம்பேக்ட் SUV ஆனது தார் ராக்ஸில் இருப்பதை போன்ற வட்ட வடிவ முகப்பு விளக்குகள், மிகவும் நிமிர்ந்த முன்பகுதி, புதிய ஃபாக் லைட்ஸ் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் உள்ளிட்ட அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேபினில் பெரிய டச்ஸ்க்ரீன், புதிய டேஷ்போர்டு லே-அவுட் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி இருக்கலாம். இன்ஜினில் எந்த மாற்றமும் இன்றி தற்போதுள்ள 100bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5L டீசல் இன்ஜின் அப்படியே தொடர உள்ளது. புதிய அப்கிரேட்களால் இதன் தொடக்கவிலை ரூ.11 லட்சம் வரை அதிகரிக்கலாம்.
2. மாருதி எஸ்குடோ:
மாருதி சுசூகி நிறுவனத்தின் இரண்டாவது மிட்-சைஸ் கார் மாடலாக எஸ்குடோ கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது. கிராண்ட் விட்டாரைவை அடிப்படையாக கொண்ட இந்த காரானது, சற்றே கூடுதல் நீளமாகவும் ஆனால் மலிவு விலையிலும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. க்ரேட்டாவிற்கு போட்டியாக களமிறக்கப்படும் இந்த காரானது அரேனா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் ஆகிய எரிபொருட்கள் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. போட்டித்தன்மை மிக்கதாக இதன் விலை 9 லட்சத்தில் தொடங்கி 10 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.
3. புதிய தலைமுறை ஹுண்டாய் வென்யு
நடப்பாண்டில் ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தும் மிக முக்கிய கார் மாடலாக இந்த மூன்றாவது தலைமுறை வென்யு கருதப்படுகிறது. இது ஹுண்டாயின் பெரிய கார்களான க்ரேட்டா மற்றும் அல்கசாரை அடிப்படையாக கொண்டு, வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற உள்ளது. கூடுதலாக இந்த புதிய காரின் பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், அப்டேடர் இன்ஃபோடெயின்மெண்ட், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், புதிய அப்ஹோல்ட்ஸ்ரி மற்றும் ADAS என ஏராளமான அம்சங்களை ஹுண்டாய் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்ஜின் அடிப்படையில் இந்த காரில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விலை 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.
4. டாடா பஞ்ச்/பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்
டாடா நிறுவனம் தனது பஞ்ச் கார் மாடலின் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன்களை அப்கிரேட் செய்து வரும் அக்டோபரில் அறிமுகபடுத்த உள்ளது. புதிய இன்ஜி எடிஷன் பஞ்சானது, தனது டிசைன் மேம்படுத்தல்களை மின்சார எடிஷனிடமிருந்து பெற உள்ளது. உட்புறத்தில் பெரிய டச்ஸ்க்ரீன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் ஆல்ட்ரோஸில் உள்ள சில அம்சங்களும் இதில் இடம்பெறலாம். இன்ஜின் அடிப்படையில் மாற்றமின்றி, அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தொடரும். அதேநேரம், பஞ்சின் புதிய மின்சார எடிஷனானது, நெக்ஸானில் உள்ள பெரிய 45KWh பேட்டரி பேக்கை பெறும் என கூறப்படுகிறது. அணுகலை எளிதாக்கும் வகையில் இந்த இரண்டு எடிஷன்களின் விலையும், 10 லட்ச ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்படலாம்.
5. டாடா சியாரா:
டாடா பிராண்டின் கிளாசிக் மாடலான சியாரா நவீன காலத்திற்கு ஏற்ப முற்றிலும் மேம்படுத்தப்பட்டு மீண்டும் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதில் 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறிய இடைவெளிக்குப் பிறகு டர்போசார்ஜ்ட் மோட்டாரும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரியர் மின்சார காரின் பவர்ட்ரெய்னை கொண்டு, சியாரா மின்சார எடிஷனும் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. வடிவமைப்பு, உட்புற வசதிகள் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில், டாடா பிராண்டை சியாரா அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்பப்படுகிறது. இதன் விலை, சுமார் 20 முதல் 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
6. ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட்
ரெனால்ர்ட் நிறுவனம் அண்மையில் மேம்படுத்தப்பட்ட ட்ரைபர் காரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, அப்கிரேட் செய்யப்பட்ட கைகர் கார் மாடலை சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்யுவின் முன்பகுதி பெரிய அளவில் திருத்தம் செய்யப்பட உள்ளது. புதியதாக வடிவமைக்கப்பட்ட க்ரில், புதிய ரெனால்ட் லோகோ மற்றும் திருத்தப்பட்ட பம்பர் ஆகியவை இதில் அடங்கும். மெட்டீரியல் தரத்தை உயர்த்துவதோடு, சில கூடுதல் அம்சங்களையும் ரெனால்ட் இதில் சேர்கக்கூடும். இன்ஜினில் எந்தவித மாற்றமும் இன்றி, 1.0 லிட்டர் நேட்சுரலில் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கிறது. இதன் தொடக்க விலை சுமார் 7 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.





















