(Source: Poll of Polls)
KIA Diwali Offer: தீபாவளி ஸ்பெஷல் ஆஃபர்களை அள்ளி வீசிய கியா - ரூ.5.84 லட்சம் வரை, சைரோஸ் டூ கார்னிவல்
KIA Cars Diwali Offer: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா கார்களுக்கு ரூ.1.35 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

KIA Cars Diwali Offer: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் சிறிய கார் மாடலான, சைரோஸிற்கு ஒரு லட்சம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கியா கார்களுக்கு தீபாவளி சலுகை:
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில்,கியா நிறுவனம் தனது பல்வேறு கார் மாடல்களுக்கும், அக்டோபர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. தென்கொரிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை சலுகைகள் நீள்கிறது. கூடுதலாக, ஏற்கனவே ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக அறிமுகப்படுத்தப்பட்ட விலை குறைப்பும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அனைத்தையும் கருத்தில் கொண்டால், முதல் முறையாக கார் வாங்க விரும்புபவர்களுக்கும், புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கும், கியாவின் எஸ்யுவிக்களை தேர்வு செய்ய இது ஒரு சரியான நேரமாக இருக்கும்.
தீபாவளி ஆஃபர்
| கியா மாடல் | பண தள்ளுபடி | எக்ஸ்சேஞ்ச் போனஸ் | மொத்த பலன் |
| சோனெட் | ரூ.10,000 | ரூ.20,000 | ரூ.50,000 வரை |
| செல்டோஸ் | ரூ.30,000 | ரூ.30,000 | ரூ.85,000 வரை |
| சைரோஸ் | ரூ.35,000 | ரூ.30,000 | ரூ.1 லட்சம் வரை |
| க்ளாவிஸ் (இன்ஜின்) | - | ரூ.30,000 | ரூ.85,000 வரை |
| கார்னிவெல் | - | ரூ.1 லட்சம் | ரூ.1.35 லட்சம் வரை |
சைரோஸ் தொடங்கி கார்னிவல் வரை:
நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து கார் மாடல்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்ரேட் ஆஃபர்ஸ் மற்றும் ஸ்க்ரேப்பேஸ் போனஸ் ஆகியவை அடங்கும். அதேநேரம், இந்த சலுகைகள் ஆனது அக்டோபர் மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டு, அதே மாதத்தில் டெலிவெரி செய்யப்படும் கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
செல்டோஸ், சோனெட்டிற்கான சலுகைகள்
குறைந்தபட்சமாக சோனெட் கார் மாடலுக்கு பணத்தள்ளுபடியாக ரூ.10 ஆயிரம் உட்பட மொத்தம் ரூ.50 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.20 ஆயிரம் மற்றும் கார்ப்ரேட் போனஸ் ரூ.15 ஆயிரம் ஆகியவையும் அடங்கும். சோனெட் காரானது இந்தியாவில் கியாவின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். மிட்-சைஸ் எஸ்யுவி ஆன செல்டோஸிற்கு ரூ.30 ஆயிரம் பணத்தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.30 ஆயிரம், ஸ்க்ராபேஜ் போனஸ் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரம் வரை சலுகைகளை பெறுகிறது.
சைரோஸ் கண்ட தடாலடி ஆஃபர்
நிறுவனம் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட சைரோஸ் ரூ.1 லட்சம் வரை அதிரடியான தள்ளுபடிகளை பெற்றுள்ளது. இதில் ரூ.35 ஆயிரம் பணத்தள்ளுபடி, ரூ.30 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ்,ஸ்க்ராபேஜ் போனஸ் ரூ.20 ஆயிரம்ம் கார்ப்ரேட் டிஸ்கவுண்ட் ரூ.15 ஆயிரம் ஆகியவை அடங்கும். பிராண்டின் MPV போர்ட்ஃபோலியோவைப் ஆராய்ந்தால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட க்ளாவிஸ் இன்ஜின் எடிஷனிற்கு ரூ. 85,000 வரை தள்ளுபடி பெறலாம். ப்ரீமியம் MPV ஆனகார்னிவல் ரூ. 1 லட்சம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் உட்பட ரூ. 1.35 லட்சம் வரை அதிகபட்ச நன்மைகளைப் பெறுகிறது.
ஜிஎஸ்டி கொடுத்த சலுகை
முன்னதாக ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாகவும் கியா நிறுவனத்தின் கார் மாடல்களின் விலை கணிசமாக குறக்கப்பட்டது.
- கியா சோனெட் - ரூ.1.64 லட்சம் வரை
- கியா சைரோஸ் - ரூ.1.85 லட்சம் வரை
- கியா காரென்ஸ் - ரூ.48,513 வரை
- கியா க்ளாவிஸ் - ரூ.78,674 வரை
- கியா செல்டோஸ் - ரூ.75,371 வரை
- கியா கார்னிவல் - ரூ.4.49 லட்சம் வரை
இந்த விலைக் குறைப்பையும் கணக்கில் கொண்டால் கியா கார் மாடல்களை அக்டோபர் மாதத்தில் மிகவும் குறைந்த விலையில் சொந்தமாக்க முடியும்.
ஜிஎஸ்டி திருத்தம் + தீபாவளி ஆஃபர்:
- கியா சோனெட் - ரூ.2.14 லட்சம் வரை
- கியா சைரோஸ் - ரூ.2.85 லட்சம் வரை
- கியா க்ளாவிஸ் - ரூ.1.63 லட்சம் வரை
- கியா செல்டோஸ் - ரூ.1.6 லட்சம் வரை
- கியா கார்னிவல் - ரூ.5.84 லட்சம் வரை சேமித்து, மேற்குறிப்பிட்ட கார்களை பயனர்கள் வாங்கலாம்.





















