Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Kia 7 Seater Hybrid: கியாவின் முதல் ஹைப்ரிட் 7 சீட்டர் கார் மாடலானது வரும் தீபாவளி சீசனில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Kia 7 Seater Hybrid: கியாவின் முதல் ஹைப்ரிட் 7 சீட்டர் கார் மாடலானது சொரெண்டோ எஸ்யுவி ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
கியா 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது பங்களிப்பை தீவிரப்படுத்த, கியா நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் ப்ராண்டின் முதல் மின்சார வாகனமும், ஹைப்ரிட் கார் மாடலும் அடுத்தடுத்து சந்தைப்படுத்தப்பட உள்ளன. இதுதொடர்பான டீசர் ஒன்றையும் தென்கொரிய நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு புதிய கார்களின் வெளியீட்டை குறிப்பிட்டு, “எதிர்காலம் அழைக்கிறது. ஒற்றை குறிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட சாத்தியகூறுகள்” என அந்நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குகள் 10 புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக கியா அண்மையில் அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் முதன்மையாக உள்ள சைரோஸ் மின்சார எடிஷனை தொடர்ந்து, கியாவின் முதல் ஹைப்ரிட் 7 சீட்டர் கார் மாடல் வரும் தீபாவளி சீசனில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.
சொரெண்டோ ஹைப்ரிட் - விலை, போட்டியாளர்கள்
இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட உள்ள கியாவின் ஹைப்ரிட் 7 சீட்டர் சொரெண்டோ என அடையாளப்படுத்தப்படும் என பெரும்பாலான தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரமான சாலை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த மாடலானது, வரும் 2026 தீபாவளி சீசனில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூரில் இந்த புதிய எஸ்யுவி ஆனது மஹிந்திரா XUV 7XO மற்றும் டாடா சஃபாரி போன்ற கார்களுக்குப் போட்டியாக அமையும். மேலும் ஸ்கோடா கோடியாக், ஜீப் மெரிடியன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் ஆர்-லைன் ஆகியவற்றிடமிருந்தும் சவாலை எதிர்கொள்ளக்கூடும். இந்த காரின் விலையை போட்டித்தன்மையுடன் வைத்திருக்க, அதிக அளவில் உள்நாட்டுமயமாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி சொரெண்டோ 7 சீட்டர் எஸ்யுவியின் விலை சுமார் ரூ. 30 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொரெண்டோ ஹைப்ரிட் பவர்ட்ரெயின்
இந்தியாவிற்கான சொரெண்டோ மாடலில், கியா செல்டோஸ் ஹைப்ரிட் மற்றும் அடுத்த தலைமுறை ஹூண்டாய் க்ரேட்டா ஆகிய கார்களிலும் பயன்படுத்தப்படவுள்ள 1.5 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவில் புதிய செல்டோஸ் காரில் உள்ள 1.6 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜினையும் கியா பயன்படுத்தக்கூடும். சர்வதேச சந்தையில் இந்த காரானது, 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. பெரும்பாலான ட்ரிம்களில் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் நிலையான ஆப்ஷனாக உள்ளது. அதே நேரத்தில் ஆல்-வீல் ட்ரைவ் ஆப்ஷன் அல்லது வேரியண்டை பொறுத்து நிலையானதாக உள்ளது.
சொரெண்டோ டிசைன் எப்படி?
அளவுகளைப் பொறுத்தவரை, கியா சொரெண்டோ 4815 மிமீ நீளம், 1900 மிமீ அகலம், 1700 மிமீ உயரமும் கொண்டிருக்கும். இந்த எஸ்யுவி 2815 மிமீ நீளமுள்ள வீல்பேஸில் இயங்குகிறது. XUV 7XO உடன் ஒப்பிடும்போது, சொரெண்டோ 120 மிமீ நீளமாகவும், 10 மிமீ அகலமாகவும், 55 மிமீ உயரம் குறைவாகவும் உள்ளது. உண்மையில், இதன் வீல்பேஸ் XUV 7XO-வை விட சுமார் 65 மிமீ நீளமானது. வெளிநாட்டு சந்தையில் எஸ்யுவியின் இருமுனைகளிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட T வடிவிலான எல்இடி மற்றும் ப்ராண்டின் ஸ்டார் மேப் பாணியிலான பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட லைட்டிங் சிக்னேட்சர் இடம்பெற்றுள்ளது.
சொரெண்டோ எஸ்யுவி - அம்சங்கள், வசதிகள்
சர்வதேச சந்தையில் உள்ள சொரெண்டோ கார் மாடலானது ஸ்க்ரீன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பேஸ் வேரியண்டில் உள்ள அகலமான பேனலில் பேரிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன் உடன் இணைக்கப்பட்ட 4.3 இன்ச் மல்டி - இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் வேரியண்ட்கள் கர்வ்ட் பேனல்களை கொண்டு, இரண்டு 12.3 இன்ச் ஸ்க்ரீன்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இது அப்படியே இந்திய சந்தைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 சீட்டரானது கியாவின் சமீபத்திய ccNC மென்பொருளை கொண்டிருக்கிறது. இது விரைவான பதில்கள், மேம்படுத்தப்பட்ட க்ராபிக்ஸ் மற்றும் டிரிமைப் பொறுத்து ஓவர் தி ஏர் அப்டேட்களை பெறும் திறனைக் கொண்டுவருகிறது. உலகளாவிய மாடலின் தொடக்க நிலை வேரியண்டில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றையும், மூன்று வரிசைகளிலும் சிதறிக்கிடக்கும் பல USB-C போர்ட்களையும் கொண்டுள்ளது. காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் கீ 2.0 அமைப்பு போன்ற பிரீமியம் அம்சங்கள் சிறந்த SX-P வேரியண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் இந்த காரானது பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























