ISRO-CAR Sensors: இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.! கார் உற்பத்தியில் கால் பதிக்கும் இஸ்ரோ.! குறையும் விலை .!
ISRO Car Sensors: இந்தியாவின் இறக்குமதியை குறைக்க கார் சென்சார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோமநாத், இறக்குமதியை நம்பி இருப்பதைக் குறைக்க, கார் சென்சார்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.
கார் சென்சார்கள்:
பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் போது விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு குறித்த அமர்வில் இஸ்ரோ தலைவர் சோமநாத் பேசினார். அப்போது பேசுகையில், குறைந்த செலவில் கார் உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
ராக்கெட் சென்சார்கள் தயாரிப்பதில் இந்தியா கணிசமான அளவு முதலீடு செய்கிறது. இந்த தருணத்தில், இறக்குமதி செய்யப்படும் கார் சென்சார்களால், கார் வாகனத்திற்கு அதிக உற்பத்திச் செலவு செய்யப்படுகிறது. இதை உள்நாட்டு உற்பத்தி மூலம குறைவான விலைக்கு சாத்தியமானதாக மாற்ற முடியும். இந்நிலையில், கார் உற்பத்தி சென்சார்களை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக இந்தியாவில் கார் உற்பத்தி செய்யும் கார் உற்பத்தி நிறுவனங்களோடு கலந்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரோ திட்டம்:
இந்தியாவில் வாகன உணரிகளை ( சென்சார்கள் ) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட வாகனத் துறையுடன் இஸ்ரோ ஒரு ஒத்துழைப்பைத் தொடங்குவுள்ளதாக திட்டமிட்டிருப்பது , இஸ்ரோவின் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வாகன உற்பத்தி தொழில், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட சென்சார்களை நம்பியுள்ளது, அவை பெரும்பாலும் குறைந்த விலையில் உள்ளன, ஆனால் இறக்குமதி செய்யப்படுவதால், சென்சார்கள் அதிக விலை கொண்டவையாக இருக்கின்றன.
இந்நிலையில் உள்ளூர் உற்பத்தியை நோக்கி மாற வேண்டியதன் அவசியத்தை இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் வலியுறுத்தினார்.
Also Read: Redmi A4 5G: ரூ. 8,499க்கு 5ஜி, 4 GB RAM மொபைலை அறிமுகம் செய்த ரெட்மி: எப்போது விற்பனைக்கு வரும்?
அசத்தும் இஸ்ரோ:
வாகனம் மற்றும் விண்வெளி துறைகளை ஒன்றிணைக்கும் நிகழ்வை இஸ்ரோ அடுத்த வாரம் நடத்தவுள்ளது. உள்ளூர் சென்சார் உற்பத்தியைப் பற்றி விவாதிப்பதே இதன் நோக்கம். பங்கேற்பாளர்கள் செலவு குறைந்த உற்பத்தி முறைகளை ஆராய்வார்கள். பெரிய அளவில் சென்சார்களை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த முயற்சி உள்நாட்டு உற்பத்தி திறன்களை வலுப்படுத்த முயலும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், உலக அளவில் மிக குறைந்த அளவில் மிக சக்தி மற்றும் திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கி, இஸ்ரோ உலகையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தருணத்தில், கார் சென்சார்கள் தயாரிப்பில் பங்கு பெறுவதாக தெரிவித்துள்ள தகவலுக்கு, பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read: TN Rain: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கனமழை, மிக கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட்.!