மேலும் அறிய

Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?

Hyundai Compact EV SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் நான்காவது மின்சார கார் மாடலாக, காம்பேக்ட் எஸ்யுவி விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

Hyundai Compact EV SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் முதல் மூன்று மின்சார கார் மாடல்களும் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுண்டாயின் புதிய மின்சார கார்:

ஹுண்டாய் நிறுவனம் இந்திய கார் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை அந்த ப்ராண்ட் சார்பில் அறிமுகமான கோனா எலெக்ட்ரிக், ஐயோனிக் 5 மற்றும் க்ரேட்டா EV ஆகிய மின்சார கார் மாடல்களும் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை. இந்நிலையில் தான் உள்நாட்டு சந்தைக்கான நான்காவது மின்சார கார் மாடலின் மீது ஜப்பான் நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது பெரும்பாலும் உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இந்த காரானது, இந்திய சூழலுக்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளதாம். எனவே மின்சார கார்களுக்கான பிரிவில் ஹுண்டாயின் முக்கிய மாடலாக வரவிருக்கும் வாகனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பேக்ட் EV - டிசைன் விவரங்கள்:

ஹுண்டாய் சார்பில் வரவிருக்கும் புதிய மின்சார  வாகனமானது A+ செக்மெண்ட் எஸ்யுவி ஆக, டாடா பஞ்சின் மின்சார எடிஷனுடன் நேரடியாக மோத உள்ளதாம். உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள இந்த மாதிரி கார்களை கொண்டு ஹுண்டாய் நிறுவனம் சாலை பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களானது, வாகனம் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிய உதவுகின்றன. சதுரமான, உயரமான கட்டமைப்பு, அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பாதுகாப்பிற்கான க்ளாடிங். பெரிய அலாய் வீல்கள் மற்றும் உயர்த்தப்பட்ட ரூஃப் ரெயில் ஆகியவற்றை கொண்டு, வரவிருக்கும் வாகனத்திற்கு முறையான எஸ்யுவி தோற்றத்தை ஹுண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

 'HE1i' என்ற கோட்நேமை கொண்டுள்ள இந்த சிறிய மின்சார வாகனத்தில், நவீன மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. நேர்த்தியான முன் மற்றும் பின்பக்க விளக்குகள், ப்ராண்டின் தனித்துவமான பாராமெட்ரிக் பிக்சல் வடிவமைப்பை ஒருங்கிணைக்கும். அதே சமயம், கதவுகளுடன் ஒட்டியபடி பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடிகள் மென்மையான தோற்றத்தை அளிக்கும்.

காம்பேக்ட் EV - அம்சங்கள், வசதிகள்

காரின் உட்புறம் புதிய டிசைன் மொழியை பின்பற்றி மிகவும் தூய்மையாகவும் மற்றும் உயர்ரக டிஜிட்டல் மயமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9.9 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இந்த கார் மூலம் ப்ராண்டில் அறிமுகமாக உளன. இவை இரண்டும் ஆண்ட்ராய்டு ஆட்டோமோட்டிவ் ஓஎஸ் அடிப்படையிலான புதிய சாஃப்ட்வேரில் இயங்கும். இருப்பினும், சிறந்த பயன்பாட்டு வசதியை உறுதி செய்வதற்காக, ஸ்பீக்கர் வால்யூம், ஏசி டெம்ப்ரேடர் மற்றும் ஃபேன் வேகம் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளுக்கும், இருக்கை காற்றோட்டத்திற்கும் ஹூண்டாய் நிறுவனம் ஃபிசிக்கல் கன்ட்ரோல்களை வழங்க உள்ளது.

காம்பேக்ட் EV - பேட்டரி, ரேஞ்ச்

ஹுண்டாய் புதிய காம்பேக்ட் மின்சார எஸ்யுவி ஆன குறைந்த ஆற்றல் கொண்ட மோட்டார் மற்றும் சிறிய பேட்டரி பேக் கொண்ட ஒரு மாடல், அதிக ஆற்றல் கொண்ட மோட்டார் மற்றும் பெரிய பேட்டரி பேக் கொண்ட மற்றொரு மாடல் என இரண்டு வேரியண்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு பேட்டரி பேக்குகளிலும், எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்திடமிருந்து உள்நாட்டில் பெறப்படும் LFP செல்கள் ஒருங்கிணைக்கப்பட வாய்ப்புகள் அதிகம். பெரிய பேட்டரியானது சுமார் 40 kWh ஆற்றல் சேமிப்புத் திறனைக் கொண்டிருப்பதுடன், 475 முதல் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய ரேஞ்சை வழங்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Honda ADV 160: லாங் ரைட் போகணுமா..! பைக்கிற்கு நோ, யமஹா, TVS-க்கு போட்டியாக ஹோண்டா ஸ்கூட்டர் - முழு விவரம்

காம்பேக்ட் EV - வெளியீடு, விலை

ஹுண்டாய் நிறுவனம் இந்த காம்பாக்ட் EV-ஐ 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், 2027 பிப்ரவரி 4 அன்று நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2027-ல் இதை அறிமுகம் செய்யக்கூடும். புதிய எலெக்ட்ரிக் SUV-யின் விலை ரூ. 10 லட்சத்திற்கும் சற்றுக் குறைவான (எக்ஸ்-ஷோரூம்) அளவில் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
KIA EV: நெக்ஸானுக்கு போட்டியாக.. 520KM ரேஞ்ச் + லைஃப்டைம் பேட்டரி வாரண்டியில் கியாவின் மின்சார கார் - முழு விவரம்
நெக்ஸானுக்கு போட்டியாக.. 520KM ரேஞ்ச் + லைஃப்டைம் பேட்டரி வாரண்டியில் கியாவின் மின்சார கார் - முழு விவரம்
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Embed widget