மேலும் அறிய

Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்

TVK Vs Senthil Balaji: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியை கூட ஒளிந்தபடி கேட்கிறார் என, தமிழக வெற்றிக் கழ்கம் சார்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

 TVK Vs Senthil Balaji: உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? என, செந்தில் பாலாஜிக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

முதலமைச்சரை விமர்சித்த செந்தில் பாலாஜி:

கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், வெண்ணெய்மலை பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது பேசுகையில், காவல்துறை வழக்கு விசாரணைக்கு பயந்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஒளிந்துகொண்டிருப்பதாக சாடினார். இதற்கு பதிலடி தரும் விதமாக வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?  திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல்,  தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது  எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என செந்தில் பாலாஜி சாடியிருந்தார்.

கரூர் கம்பெனி ஓனரே - தவெக

பதிலடி தரும் விதமாக தவெகவின் ஐடி விங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கரூர் கம்பெனி முதலாளியும் தலைமைக் குடும்பத்திற்குக் கப்பம் கட்டுபவருமான மிஸ்டர் மெகா க்ளீன்(?), ஒரு ட்விட் போட்டு உருட்டி இருக்கிறார். அதில் தானும் உருண்டு புரண்டு, அய்யோ அம்மா நெஞ்சு வலி என்று கார்க் கதவை உதைத்துக்கொண்டே கதறியது போலக் கதறி இருக்கிறார்.

“யாரை முதலமைச்சர் ஆக்கலாம்னு பார்த்தப்ப… அந்தப் பட்டியல்ல இவரும் இருந்தாருங்க… இவரு கெட்ட கேடு…” என்று ஸ்டாலின் சாரால் அன்பாக, பண்பாக, ஊழலற்ற நேர்மைக்காகப் புகழப்பெற்றவர்தான், இன்று நம் வெற்றித் தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கிளம்பி இருக்கிறார். அதைக்கூடப் பொதுவெளிக்கு வந்து கேட்கவில்லை. அதையும் ஒளிந்தபடி ஓடிக்கொண்டேதான் கேட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை

”டாஸ்மாக் ஊழல் Don”

அரசியல் வியாபார vending machine திமுகவால் purchase செய்யப்பட்டு, பின்னர் அறிவாலய வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்தெடுக்கப்பட்டவர், டாஸ்மாக் ஊழல் Don, இன்று நேர்மையாளர் போலப் பேசுவது, நரி நடனமாடுவது போல நகைச்சுவையாக இருக்கிறது. உண்மையும் நேர்மையும் இருந்தால், ஓடி ஒளியாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே? அந்தத்  திராணி இல்லாமல் தெறித்து ஓடிய நீங்கள் எல்லாம்????? நாடே சிரிக்கிறது இந்த நரித்தந்திர நாயகர், ஊழல் உத்தமரைப் பார்த்து. இனியும் உங்கள் உத்தமர் வேடம் எடுபடாது, மிஸ்டர் மெகா க்ளீன்(?)” என தவெக விமர்சித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget