Hyundai Ioniq 6: மணிக்கு 260 கிமீ டாப் ஸ்பீட் - ஐயோனிக் 6 N-ஐ களமிறக்கும் ஹுண்டாய் - கதறும் பிஎம்டபள்யு, டெஸ்லா
Hyundai Ioniq 6 N EV: ஹுண்டாய் நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட ஐயோனிக் 6 மின்சார கார் மாடல், வரும் ஜுலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Hyundai Ioniq 6 N EV: ஹுண்டாய் நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட ஐயோனிக் 6 மின்சார கார் மாடல், ஆல் வீல் ட்ரைவ் செட்டப்பை கொண்டுள்ளது.
ஹுண்டாய் ஐயோனிக் 6 N:
சர்வதேச ஆட்டோமோபைல் சந்தையில் தென்கொரிய நிறுவனமான ஹுண்டாய், விரைவில் ஐயோனிக் 6 N மின்சார கார் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. உயர் செயல் திறன் கொண்ட இந்த மின்சார செடான் காரானது, நடப்பாண்டின் தொடக்கத்திலேயே டீஸ் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐயோனிக் 5 N கார் மாடலின் வெற்றியை தொடர்ந்து, ஐயோனிக் 6 N சந்தைக்கு கொண்டுவரப்பட உள்ளது. உயர் செயல்திறன் கொண்ட N போர்ட்ஃபோலியோவை விரிவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது.
ஐயோனிக் 6 N காரின் வடிவமைப்பு விவரங்கள்:
நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் போதிய விவரங்கள் எதையும் வெளியிடாவிட்டாலும், ரியர் விங் மற்றும் டெயில் லைட்டிங் போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளன. கூர்மையான பானெட் ஸ்லீக் ஆன LED DRL-கள் போன்றவற்றுடன் அகலமான ஸ்டேன்ஸ் மற்றும் லைட்வெயிட் வீல்கள் இணைக்கப்பட்டுள்ளன. பின்புற பகுதிகள் பிக்சல் வடிவிலான டெயில் லைட்கள் கொண்டுள்ளன. இவை முற்றிலுமாக கனெக்டடாக இல்லாவிட்டாலும், டாட்டட் லைனை போன்று காட்சியளிக்கிறது.
Performance is about to be redefined.
— Hyundai UK (@Hyundai_UK) June 12, 2025
Stay tuned for what’s next - IONIQ 6 N at Goodwood Festival of Speed.
#HyundaiUK #HyundaiN #Neverjustdrive #WorldPremiere #Teaser #IONIQ6N #HighperformanceEV pic.twitter.com/8wohkiQOva
ஐயோனிக் 6 N காரின் தொழில்நுட்ப அம்சங்கள்:
ஐயோனிக் 6 N கார் மாடலானது 'கார்னர் ராஸ்கல்', 'ரேஸ்ட்ராக் கேபபிலிட்டி' மற்றும் 'எவ்ரிடே ஸ்போர்ட்ஸ்கார்' ஆகிய மூன்று முக்கிய செயல்திறன் தூண்களைக் கொண்டுள்ளது என்று ஹுண்டாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதவாது,
- கார்னர் ராஸ்கல் - சுறுசுறுப்பான மற்றும் கையாள எளிமையானது
- ரேஸ்ட்ராக் கேபபிலிட்டி - கடினமான பாதை சூழல்களை கையாளும் வகையிலான வடிவமைப்பு
- எவ்ரிடே ஸ்போர்ட்ஸ்கார் - தினசரி ஓட்டுவதற்கு ஏற்ற அம்சங்களை கொண்ட கார்
விவரக்குறிப்புகள் குறித்து எந்த விவரக்குறிப்புகளும் இல்லை என்றாலும், ஐயோனிக் 6 N, ஐயோனிக் 5 N-ஐ ஆதரிக்கும் அதே 641 bhp AWD மின்சார பவர்டிரெயினை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐயோனிக் 5 பேட்டரி விவரங்கள்:
Ioniq 6 N கார் மாடலானது loniq 5 மற்றும் Kia EV6 மாடல்கள் கட்டமைக்கப்பட்ட E-GMP (Electrified-Global Modular Platform) பிளாட்ஃபார்மில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது இரட்டை-மோட்டார் அமைப்பைக் கொண்டுவருகிறது. முன்பக்க மின்சார மோட்டார் 222 bhp ஆற்றலையும், பின்புற மோட்டார் 377 bhp ஆற்றலையும் வழங்குகிறது. இதன் மூலம், loniq 5 N கார் மாடலானது 3.4 வினாடிகளில் 0-100 kmph வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 260 km வேகத்தில் செல்லும். இது 84 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 355 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.
ஐயோனிக் 6 விலை, வெளியீடு எப்போது?
ஒரே மாதிரியான தளத்தில் கட்டமைக்கப்படுவதால் loniq 6 N பெரும்பாலும் ஐயோனிக் 5-வை ஒத்த விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கும், அதேநேரம் தோற்றம் ஒரே மாதிரியாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2025 இல் நடைபெறும் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடில் ஹூண்டாய் அதிகாரப்பூர்வமாக ஐயோனிக் 6 N ஐ அறிமுகப்படுத்தும். ஐயோனிக் 5 N இன் விலை இந்திய மதிப்பில் ரூ.56.62 லட்சம் ஆக இருப்பதால், புதிய செடானின் விலை $70,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.59.87 லட்சம் விலையில் இருக்கும் அதே வேளையில் சிறிது பிரீமியத்தையும் தாங்கும் என்று எதிர்பார்க்கலாம். சர்வதேச சந்தையில் இந்த காரானது BMW i4 M50 மற்றும் டெஸ்லாவின் Model 3 Performance ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஐயோனிக் கார்கள் எப்படி?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஐயோனிக் 5 கார் மாடலானது, ஹுண்டாயின் முதன்மையான மின்சார கார் மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அந்த காரின் விற்பனை என்பது மிகவும் மந்தமாகவே உள்ளது. கடந்த மாதம் ரூ.4 லட்சம் வரை சலுகை வழங்கப்பட்டும் கூட, வெறும் 11 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதேநேரம், ஐயோனிக் 5 கார் மாடலின் பிரீமியம் எடிஷனான, ஐயோனிக் 5 N இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவே இல்லை. உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியானாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தான், ஐயோனிக் 6 N விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்ப்ட உள்ளது. ஆனால், இந்திய சந்தைக்கு வருவது என்பது சந்தேகமே.





















