70 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் Honda Livo பைக்.. விலை எவ்வேளா நண்பா?
ஹோண்டா நிறுவனத்தின் Honda Livo பைக்கின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஹோண்டா. அதிக மைலேஜ் தரும் பைக் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பில் இந்த நிறுவனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
Honda Livo பைக்:
ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான பைக் Honda Livo ஆகும். ஹோண்டா நிறுவனத்தின் Honda Livo பைக்கின் தரம், மைலேஜ், விலை குறித்து கீழே விரிவாக காணலாம்.
Honda Livo பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.
1. Livo Drum - ரூபாய் 98 ஆயிரத்து 87
2. Livo Disc - ரூபாய் 1 லட்சத்து 990
Livo Drum இரு சக்கர வாகனத்தில் டிரம் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். Livo Disc இரு சக்கர வாகனத்தில் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு பைக்குகளிலும் அலாய் சக்கரங்களே பொருத்தப்பட்டுள்ளது.
எஞ்ஜின்:
இந்த பைக்கில் 109.51 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 கியர்கள் வரை உள்ளது. 112 கிலோ எடை கொண்டது. 9 லிட்டர் வரை பெட்ரோல் டேங்க் திறன் கொண்டது. இந்த பைக்கின் இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும்.
சிறப்புகள்:
8.67 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 7 ஆயிரத்து 500 ஆர்பிஎம் கொண்டது. 9.3 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 ஆயிரத்து 500 ஆர்பிஎம் திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது.
முன்பக்க சஸ்பென்சன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வசதி கொண்டது. பின்புற சஸ்பென்சன் ஹைட்ராலிக் டைப் ஆகும். 3 வருடங்கள் ஸ்டாண்ட்ர்ட் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
மைலேஜ்:
இந்த இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 110 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் மிகவும் சுமூகமாக உள்ளது. நல்ல மைலேஜ் தருவது இதன் பலமாகும். இந்த இரு சக்கர வாகன பயன்பாட்டாளர்கள் பலரும் இது நகர்ப்புறங்களிலே 65 முதல் 70 கி,மீட்டர் வரை மைலேஜ் தருவதாக கூறுகின்றனர்.
இந்த Honda Livo பைக் கருநீலம் மஞ்சள், சாம்பல் நீலம், கருப்பு சிவப்பு ஆகிய வண்ணங்களில் காணப்படுகிறது. முதல் சர்வீஸ் 750 முதல் 1000 கிலோமீட்டர் வரையிலும், 2வது சர்வீஸ் 5 ஆயிரத்து 500 முதல் 6 ஆயிரம் கிலோமீட்டர் வரையிலும், 3வது சர்வீஸ் 11 ஆயிரத்து 500 கிலோமீட்டர் வரையிலும் 12 ஆயிரம் கிலோமீட்டர் வரையிலும், அடுத்தடுத்த ஒவ்வாரு 6 ஆயிரம் கிலோமீட்டருக்கும் சர்வீஸ் செய்வது நல்லது ஆகும்.
ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் ஆகியவை டிஜிட்டல் ஆகும். லோ ஃ பயூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. சார்ஜிங் வசதி இல்லை.





















