Honda Car Offers: ரூ.92 ஆயிரம் வரை ஆஃபர்.. செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா - எந்தெந்த காருக்கு?
ஹோண்டா நிறுவனம் தங்களது முன்னணி கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கார்களின் விற்பனையை அதிகரிக்க ஒவ்வொரு நிறுவனமும் தள்ளுபடி அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கார்களுக்கும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ள நிலையில், கார்களுக்கான தள்ளுபடியை தற்போது ஹோண்டா அறிவித்துள்ளது.
ஹோண்டா எந்தெந்த காருக்கு எவ்வளவு சலுகை அறிவித்துள்ளது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. Honda Amaze VX - ரூபாய் 30 ஆயிரம்
2. Honda Amaze ZX - ரூபாய் 60 ஆயிரம்
3. Honda City - ரூபாய் 92 ஆயிரம்
4. Honda Elevate MT - ரூபாய் 79 ஆயிரம்
1. Honda Amaze VX:
ஹோண்டா நிறுவனத்தின் Honda Amaze VX கார் வாடிக்கையாளர்களை கவர்ந்த கார் ஆகும். இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி அறிவித்துள்ளனர். காரை எக்சேஞ்ச் செய்தால் ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி சலுகை கிடைக்கும். மேலும், ரூபாய் 4 ஆயிரம் லாயல்டி, 6 ஆயிரம் ரூபாய் லாயல்டி சலுகை மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 5 மற்றும் 7 கியர் கொண்டது. மேனுவலில் 5 கியரும், ஆட்டோமெட்டிக்கில் 7 கியரும் உள்ளது. மைலேஜ் 20 கி.மீட்டர் தருகிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 8.09 லட்சம் ஆகும்.
2. Honda Amaze ZX:
ஹோண்டா நிறுவனத்தின் Honda Amaze ZX காருக்கு நல்ல சலுகை அறிவித்துள்ளனர். இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி அறிவித்துள்ளனர். காரை எக்சேஞ்ச் செய்தால் ரூபாய் 40 ஆயிரம் தள்ளுபடி சலுகை கிடைக்கும். மேலும், லாயல்டி ரூபாய் 4 ஆயிரமும், லாயல்டி எக்சேஞ்ச் ரூபாய் 6 ஆயிரமும், கார்ப்பரேட் சலுகையும் கிடைக்கும்.

இந்த கார் 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 89 பிஎச்பி திறன் கொண்டது. 19 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. பெட்ரோலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 10 லட்சம் ஆகும்.
3. Honda City:
ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான கார் இந்த Honda City ஆகும். இந்த காருக்கு ரொக்கமாக தள்ளுபடி அறிவிக்கவில்லை. ஆனால், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 25 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஹோண்டா காரையே எக்சேஞ்ச் செய்தால் ரூபாய் 35 ஆயிரம் சலுகை வழங்கப்படும்.

இதுதவிர ரூபாய் 4 ஆயிரம் லாயல்டியும், கார்ப்பரேட் சலுகையும், 7 ஆண்டுகள் வாரண்டிக்கு மதிப்பான ரூபாய் 28 ஆயிரம் வழங்கப்படும். இந்த கார் 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. இது 6 கியர் மேனுவல் காரிலும், 7 கியர் ஆட்டோமெட்டிக் காரிலும் கொண்டது ஆகும். லிட்டருக்கு 18.4 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 12.38 லட்சம் ஆகும்.
4. Honda Elevate MT:
இந்த Honda Elevate MT மாடலுக்கு ரூபாய் 15 ஆயிரம் ரொக்கமாக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக Zx-க்கு ரூபாய் 25 ஆயிரமும், V மற்றும் Vx-க்கு ரூபாய் 10 ஆயிரமும் எக்சேஞ்ச் ஆஃபராக வழங்கப்படுகிறது. ரூபாய் 4 ஆயிரம் லாயல்டி தொகையாகவும், ரூபாய் 35 ஆயிரம் ஹோண்டா டூ ஹோண்டா லாயல்டி எக்சேஞ்ச் ஆஃபராகவும், கார்ப்பரேட் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வசதிகளை கொண்ட இந்த கார் 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை உள்ளடக்கியது. மேனுவலில் 6 கியரையும், ஆட்டோமெட்டிக்கில் 7 கியரையும் கொண்டது இந்த கார். இது லிட்டருக்கு 17 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. இதன் விலை ரூபாய் 11.91 லட்சம் ஆகும்.
இதுதவிர Honda City Hybrid காருக்கு 7 ஆண்டுகள் வாரண்டியும், Honda Amaze V காருக்கு லாயல்டி ப்ளஸ் எக்சேஞ்சும், கார்ப்பரேட் சலுகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு என்று தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தரத்திலும் டாடா, ஹுண்டாய், மஹிந்திராவிற்கு சவால் தரும் வகையில் பல அம்சங்கள் உள்ளது.





















