Splendor vs Shine: ஹீரோ ஸ்ப்ளெண்டர் vs ஹோண்டா ஷைன்.. 550 கி.மீ ரேஞ்ச்.. சிறந்த மைலேஜ் தரும் பைக் எது?
Hero Splendor vs Honda Shine: ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா ஷைன் ஆகியவை இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மற்றும் நல்ல மைலேஜ் தரும் பைக்குகள் ஆகும்

Hero Spelondor vs Honda Shine: இப்போதெல்லாம் பைக்குகள் மக்களிn அன்றாடத் தேவையாகிவிட்டன. தங்கள் அன்றாட பயணங்களுக்கு பைக்குகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே, அதிக மைலேஜ் கொண்ட பைக்கை வாங்குவது தினசரி ரைடுகளுக்கு நன்மை பயக்கும். கூடுதலாக, மக்கள் மலிவு விலை பைக்குகளையும் விரும்புகிறார்கள். ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா ஷைன் ஆகியவை இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மற்றும் நல்ல மைலேஜ் தரும் பைக்குகள் ஆகும். இதில் எந்த பைக் நல்ல தருகிறது என்பதை விரிவாக காணாலாம்.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
ஹீரோ ஸ்ப்ளெண்டர் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள் ஆகும். இது இந்திய சந்தையில் நான்கு வகைகளில் கிடைக்கிறது. ஸ்ப்ளெண்டர் பிளஸ், ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் OHC எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 8,000 rpm இல் 5.9 kW ஆற்றலையும் 6,000 rpm இல் 8.05 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ₹73,902 இல் தொடங்கி ₹76,437 வரை இருக்கும்.
ஹோண்டா ஷைன்
ஹோண்டா ஷைன் பல ஆண்டுகளாகவே நல்ல மைலேஜ் தரும் பைக்காக பார்க்கபடுகிறது. ஹோண்டா ஷைன் பைக்கானது 4-ஸ்ட்ரோக், SI, BS-VI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 7,500 rpm இல் 7.93 kW ஆற்றலையும் 6,000 rpm இல் 11 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த பைக் ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஹோண்டா ஷைனின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹79,352 முதல் ₹83,711 வரை இருக்கும்.
சிறந்த மைலேஜ் தரும் பைக் எது?
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் லிட்டருக்கு 61 கிமீ மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. இது 9.8 லிட்டர் எரிபொருளைத் தாங்கும் திறன் கொண்டது, மேலும் இந்த பைக்கில் முழு டேங்கை நிரப்பினால் 598 கிலோமீட்டர் தூரம் செல்லும். ஹோண்டா ஷைன் ஒரு லிட்டர் பெட்ரோலில் 55 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று கூறுப்படுகிறது. இது 10.5 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவுடன் வருகிறது, இது ஒரு முழு டேங்கில் 578 கிலோமீட்டர் தூரம் செல்லும். இதன் விளைவாக, இரண்டு பைக்குகளும் முழு டேங்கில் 550 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்க முடியும்.






















