மேலும் அறிய

மஹேந்திரா எக்ஸ்யுவி 700: வெளியான சில மணி நேரங்களில் 25ஆயிரம் கார்கள் புக்கிங்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியான சில மணி நேரங்களிலேயே 25ஆயிரம் புக்கிங்குகள் செய்யப்பட்டுள்ளன.

மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி700 என்னும் புதிய காருக்கான புக்கிங்கை அக்டோபர் 7 காலை இந்தியாவில் தொடங்கியது. புக்கிங் தொடங்கப்பட்ட வெறும் 57 நிமிடங்களிலேயே 25 ஆயிரம் கார்களுக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டன. வாடிக்கையாளர்கள் முந்தியடித்துக் கொண்டு கடுமையான ரெஸ்பான்ஸை வழங்கியதனால் நேற்றைய தினத்தின் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட புக்கிங் பணிகள் மீண்டும் இன்று தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் புக்கிங் தொடங்கிய குறுகிய இடைவெளியிலேயே 25 ஆயிரம் கார்களுக்கான புக்கிங் நிறைவுற்றிருக்கின்றது. நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, 2 மணி நேரங்கள் 8 நிமிடத்திற்கு உள்ளாகவே 25 ஆயிரம் கார்களுக்கான புக்கிங் கிடைத்திருப்பதாக தெரிய வந்திருக்கின்றது. இத்தகைய அமோக வரவேற்பினால் மஹிந்திரா நிறுவனம் தற்போது மகிழ்ச்சியில் திகைத்திருக்கின்றது. நேற்றைய தினம், முதல் 25 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்த பின்னர் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரின் விலையை உயர்த்தியது. அனைத்து தேர்வுகளின் விலையிலும் ரூ. 50 ஆயிரம் வரை விலையை உயர்த்தியது. முதல் 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு பின்னர் விலை உயர்த்தப்படும் என நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படியே எக்ஸ்யூவி700 காரின் விலை உடனடியாக உயர்த்தப்பட்டது. ஆகையால், விற்பனைக்கு வந்த முதல் நாளே விலை உயர்வைப் பெற்ற முதல் கார் என்ற பெருமைக்குரிய காராக மஹிந்திரா எக்ஸ்யூவி700 மாறியது. 

மஹேந்திரா எக்ஸ்யுவி 700: வெளியான சில மணி நேரங்களில் 25ஆயிரம் கார்கள் புக்கிங்!

அதேவேலையில், விலை உயர்வைப் பெற்றாலும் இந்தியர்கள் மத்தியில் தற்போது வரவேற்பு குறையாத காராகவும் அது மாறியிருக்கின்றது. இதற்கு இரண்டாவது நாளாக விலேயேற்றிய பிறகு இன்றும் புக்கிங் நிலவி வருவதே உதாரணமாக உள்ளது. தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 12.49 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. முன்னதாக ரூ. 11.99 லட்சமாக இதன் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. முதல் 25 ஆயிரம் யூனிட் எக்ஸ்யூவி700 விற்பனையானதை அடுத்து தற்போது அனைத்து வேரியண்டுகளும் இதுபோன்று ரூ. 50 ஆயிரம் விலை உயர்வுடன் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. தற்போது ஒட்டுமொத்தமாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு 50 ஆயிரம் பேர் புக்கிங் செய்துள்ளனர். இதற்கான மொத்த மதிப்பு 9,500 கோடி ரூபாய் ஆகும். எக்ஸ்-ஷோரூம் விலையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அமோக வரவேற்பிற்கு எக்ஸ்யூவி700 கார் உருவாகியிருக்கும் விதமும் ஓர் முக்கிய காரணம் ஆகும்.

மஹேந்திரா எக்ஸ்யுவி 700: வெளியான சில மணி நேரங்களில் 25ஆயிரம் கார்கள் புக்கிங்!

இந்த காரை மஹிந்திரா நிறுவனம் உலக தரம் வாய்ந்த கார்களுக்கு இணையாக உருவாக்கியுள்ளது. இன்டலிஜென்ட் காக்பிட், ஸ்கைரூஃப் வசதி, ஸ்மார்ட் டூர் ஹேண்டில்கள், டைமண்ட் கட் அலாய் வீல், துள்ளியமான பார்வை திறனை வழங்கக் கூடிய எல்இடி ஹெட்லேம்ப், குரோம் க்ரில் என எக்கசக்க அம்சங்கள் எக்ஸ்யூவி700 காரில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், அடாஸ் (Advanced Driver Assistance System), அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், இபிடி, இஎஸ்பி, டிசி, ஏபிஎஸ், ஏழு ஏர் பேக்குகள், ஹைபீம் அசிஸ்ட், இரட்டை-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பன்முக டிரைவிங் மோட்கள் என உள்ளிட்ட மிக தரமான அம்சங்கள் எக்ஸ்யூவி700-இல் இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்து, முழு வண்ண டிஜிட்டல் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களும் காரில் இடம் பெற்றிருக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனக்குக் கிடைக்கும். 

தலைப்பு செய்திகள்

Tata Car Discount: ரூ.3.35 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசிய டாடா - நெக்ஸான் தொடங்கி ஹாரியர் வரை - EV ஆஃபர்
ரூ.3.35 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசிய டாடா - நெக்ஸான் தொடங்கி ஹாரியர் வரை - EV ஆஃபர்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Victoris: 5 ஸ்டார் ரேட்டிங், 27KM மைலேஜ்..! மாருதியின் எஸ்யுவிக்கு போட்டியாக 3 கார்கள் - விலை, வசதிகள் எப்படி?
5 ஸ்டார் ரேட்டிங், 27KM மைலேஜ்..! மாருதியின் எஸ்யுவிக்கு போட்டியாக 3 கார்கள் - விலை, வசதிகள் எப்படி?
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget