மேலும் அறிய

Flood Damaged Cars: செகண்ட்- ஹேண்ட் கார் வாங்கும் ஐடியா இருக்கா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரை கண்டுபிடிப்பது எப்படி?

Flood Damaged Cars: மிகவும் கவனிக்கவேண்டியது என்னவென்றால் வெள்ளத்தினால் பாதிப்படைந்த கார்களுக்கு இன்சுரன்ஸ் கம்பெனிகள் இன்சுரன்ஸ் க்ளைம் செய்து கொடுப்பதில்லை. 

சென்னையை ஒட்டுமொத்தமாக வெள்ளம் புரட்டி போட்டதில் அரசும், மக்களும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டதில் உயிர்ச் சேதம் என்பது பெருமளவு தவிர்க்கப்பட்டது. ஆனால் பொருட்சேதம் என்பதை தவிர்க்க முடியவில்லை. கடுமையான வெள்ளத்தினால் ஆயிரம் கிலோவில் இருந்து மூன்று ஆயிரம் கிலோ வரை உள்ள கார்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்கள்:

இது மட்டும் இல்லாமல் ஒரு சக்கரவாகனங்களை பலர் பாதுக்க எவ்வளவோ முயற்சித்தும் அவையும் வெள்ளத்திற்கு இரையாவதைத் தடுக்க முடியவில்லை. இதனால் சென்னையில் உள்ள லட்சக்கணக்கான வாகங்கள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த வாகனங்களை எப்படி சரி செய்வது? என பலர் பல அறிவுரைகளை மக்களுக்கு கூறிவருகின்றனர்.

இந்த நேரத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த காரினை விற்பனை செய்ய முன்வருவார்கள். செகண்ட்-ஹேண்ட் கார் வாங்க நினைப்பவர்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்த காரினை வாங்கி தங்களது பணத்தினை இழக்க வேண்டாம். வெள்ளத்தல் பாதிக்கப்பட்ட கார்களை எப்படி அடையாளம் காண்பது என இந்த கட்டுரையில் காணலாம். இதில் மிகவும் கவனிக்கவேண்டியது என்னவென்றால் வெள்ளத்தினால் பாதிப்படைந்த கார்களுக்கு இன்சுரன்ஸ் கம்பெனிகள் இன்சுரன்ஸ் க்ளைம் செய்து கொடுப்பதில்லை. 

Flood Damaged Cars: செகண்ட்- ஹேண்ட் கார் வாங்கும் ஐடியா இருக்கா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரை கண்டுபிடிப்பது எப்படி?

வெள்ளத்தில் சேதமடைந்த காரின் அறிகுறிகள் என்ன?

ஒருவகையான நாற்றம்

வெள்ளத்தில் மூழ்கிய காரின் உட்புறம் நீர் தேங்கி நின்ற காரணமாக பெரும்பாலும் அழுக்கு அல்லது பூஞ்சை நாற்றத்தை ஏற்படுத்தும். வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தின் ஒவ்வொரு பகுதியையும் முழுவதுமாக சுத்தம் செய்ய முடியாமல் போகலாம் உதாரணமாக கதவு பேனல்களுக்குப் பின்னால்.  பூஞ்சை காளான் வாசனையை மறைக்க ஏர் ஃப்ரெஷ்னர்கள் போன்றவற்றினை அதிகமாக பயன்படுத்தி இருக்கலாம். அதனால் அப்படியான கார்களையும் சந்தேகிக்க வேண்டும். காரின் ஏசியை எப்போதும் இயக்கவும், அது ஏற்கனவே காரில் வீசும் வாசனையை உருவாக்குகிறதா? என்பதை சரி பார்க்கவும்.

நிறம் மாறிய உட்புறம்

வாகனத்தின் கார்பெட் அல்லது அப்ஹோல்ஸ்டரியில் பெரிய கறைகள் நீரினால் ஏற்பட்ட சேதத்தின் அறிகுறிகளாகும். வெள்ள நிரினால் பாதிப்படைந்த பயன்படுத்திய காரில் புத்தம் புதிய அப்ஹோல்ஸ்டரி இருந்தாலும் அந்த காரின் மீதும் சந்திக்க வேண்டும்.  ஏனெனில் காரினை விற்பனை செய்ய முயற்சிப்பவர் வெள்ள சேதத்தை மறைக்க இவ்வாறு முயற்சிக்கலாம். ஈரப்பதம் அல்லது பூஞ்சை காளான் அறிகுறிகளைக் காண சீட் பெல்ட்டை முழுவதுமாக வெளியே இழுத்து சரி பார்க்கவேண்டும்.

Flood Damaged Cars: செகண்ட்- ஹேண்ட் கார் வாங்கும் ஐடியா இருக்கா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரை கண்டுபிடிப்பது எப்படி? 

இக்கட்டான இடங்களில் மணல் அல்லது அழுக்கு

வெள்ள நீர் மணல் மற்றும் அழுக்கை வாகனத்திற்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கும், இது சுத்தம் செய்ய கடினமாக இருக்கும். தரைவிரிப்புக்கு அடியிலும், கையுறை பெட்டியிலும், இருக்கைகளின் கீழும் மணல் அல்லது சேறு இருக்கிறதா? என்று பார்த்து காரினை வாங்க வேண்டும். என்ஜினைச் சுற்றி மணல் அதாவது மண் அல்லது சேறு இருக்கிறதா? என்று பார்க்க என்ஜின் பேனட்டைத் திறந்து சரிபார்க்கவும்.

துரு மற்றும் ஈரப்பதம்

காரின் அடிப்பகுதியில் துரு இருக்கிறதா? என்று பாருங்கள். வெள்ளத்தில் மூழ்கிய வாகனம், கார் வாங்கப்பட்ட ஆண்டினை கணக்கிட்டுப் பார்த்தால் காரின் அடிப்பகுதியில் துருப்பிடித்தல் என்பது எதிர்பார்ப்பதை விட அதிக இருக்கும். கன்சோல் பகுதியிலும் கதவுகளைச் சுற்றிலும், டாஷ்போர்டின் கீழும், இன்ஜின் பானட் கதவின் உள்ளேயும் கூட துருப்பிடித்த ஸ்க்ரூக்கள் உள்ளதா? எனப் பார்க்கவும். உட்புற அல்லது வெளிப்புற விளக்குகளில் ஈரப்பதமாகவோ அல்லது பனி மூட்டம் போல இருந்தால் அந்த கார் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கார் ஆகும். 

Flood Damaged Cars: செகண்ட்- ஹேண்ட் கார் வாங்கும் ஐடியா இருக்கா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரை கண்டுபிடிப்பது எப்படி?

புகை மற்றும் தேவையற்ற சத்தம்

வெள்ள சேத அறிகுறிகள் உள்ளதா? என காரை நீங்கள் பரிசோதித்தவுடன், சோதனை ஓட்டத்தின் போது தேவையற்ற சத்தங்கள் வருகின்றதா? இல்லையா? என்பதை சரிபார்க்க வேண்டும். ஏற்கனவே பயன்படுத்திய வாகனம் வாங்கும் போது காரில் இருந்து வரும் புகை பழைய காரில் இருந்து வரும் புகையைப் போல் இருக்க வேண்டும். அதைவிடுத்து கார் வெள்ளத்தில் மூழ்கியிருந்தால் காரின் எஞ்சின் புகை என்பது மிகவும் மோசமாக அதாவது அடர் வெள்ளை நிறத்தில் வரும். இப்படியான காரினை வாங்குவதையும் தவிர்க்கவேண்டும்.  

பிரேக்குகள் அல்லது ஸ்டீயரிங் வீலில் இருந்து வரும் ஒருமாதிரியான சத்தங்கள், அந்த பகுதியில் மணல் அல்லது அழுக்கு சூழ்ந்திருப்பதற்கான அறிகுறிகள். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சத்தங்கள் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தின் அறிக்குறிகள். 

எலக்ட்ரானிக்ஸ்

தண்ணீர் எலக்ட்ரானிக்ஸ்க்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும், எனவே வாகனத்தில் உள்ள அனைத்தையும் சரிபார்க்கவும். விளக்குகள், ஆடியோ சிஸ்டம், விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் மற்றும் இண்டிகேட்டர் சிக்னல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட வேண்டும். அவைகள் வேலை செய்யவில்லை அல்லது வித்தியாசமாக வேலை செய்தால், காரின் வெள்ளத்தினால் அல்லது தண்ணீரினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget