EV Battery: 6 நிமிடங்களில் 98% சார்ஜ், 1500 கிமீ ரேஞ்ச், 0.6 விநாடிகளில் 100KM ஸ்பீட் - சீனாவின் கார் பேட்டரி
CATL 1500 Km EV Battery: வெறும் 6 நிமிடங்கள் 98 சதவிகிதம் வரையிலான சார்ஜிங்கை எட்டி 1500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் புதிய பேட்டரியை சீன நிறுவனம் உற்பத்தி செய்து அசத்தியுள்ளது.

CATL 1500 Km EV Battery: மின்சார கார் உற்பத்தி பிரிவில் BYD போன்ற நிறுவனங்களை காட்டிலும் முன்னிலை பெறும் நோக்கில், சீனாவின் CATL நிறுவனம் புதிய பேட்டரியை உற்பத்தி செய்துள்ளது.
6 நிமிடங்களில் 98% சார்ஜ்
மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக, சீனாவைச் சேர்ந்த காண்டெம்ப்ரரி ஆம்ப்ரெக்ஸ் டெக்னாலஜி கோ. லிமிடெட் (CATL) நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில் BYD போன்ற நிறுவனங்களை காட்டிலும் முன்னிலை பெறும் வகையில், பீஜிங் ஆட்டோ ஷோவை முன்னிட்டு புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிங்டேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் CATL என பொதுவாக அறியப்படும் நிறுவனமானது, ஷென்சிங் லித்தியம் - அயர்ன் - பாஸ்பேட் பேட்டரியை காட்சிப்படுத்தியுள்ளது. இது வெறும் 6 நிமிடங்களில் 10 முதல் 98 சதவிகிதம் வரையிலான சார்ஜிங் நிலையை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல்/டீசலில் இயங்கும் வாகனங்களின் எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பும் நேரத்தில், இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து முடிக்க முடியும் என கூறப்படுகிறது.
ஆபத்தில் BYD நிறுவன சாதனை
CATL நிறுவனத்தின் புதிய பேட்டரி 10 முதல் 35 சதவிகிதம் என்ற சார்ஜிங் நிலையை வெறும் 35 நிமிடங்களில் எட்டிவிடுமாம். அதேநேரம், இந்த நேர வரம்புகளானது மிதமான வெப்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு கணக்கிடப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிஜ உலக பயன்பாட்டிலும் உறுதி செய்யப்பட்டால், வெறும் 9 நிமிடங்களில் 100 சதவிகித சார்ஜிங் நிலையை எட்டும் வகையில் ஒரு பேட்டரியை அறிமுகப்படுத்திய BYD நிறுவனத்தின் சாதனையை CATL நிறுவனம் முறியடிக்கக் கூடும். முழுமையாக சார்ஜ் செய்தால் இது ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற நிறுவனத்தின் ”சூப்பர் டெக் டே” நிகழ்ச்சியில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
1,500 கிலோ மீட்டர் ரேஞ்ச்
நிகழ்ச்சியில் CATL நிறுவனமானது தனது மூன்றவாது தலைமுறை Qilin பேட்டரியை அறிமுகப்படுத்தியது. இது 10C ஸ்டேண்டர்ட் சார்ஜிங் ரேட்டிற்கு ஆதரவளிக்கிறது. அதிகபட்சமாக 15C அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வரை ஆதரவை பெற முடிகிறது. இதன் 625 கிலோ எடையிலான பேட்டரி பேக்கானது ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச்சை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ராண்டின் மற்றொரு பேட்டரியான கண்டென்சட் - மேட்டர் பேட்டரியானது செடான் மாடல்களுக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கிறதாம். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் விவரங்கள் & பலன்கள் என்ன?
1000 கிலோ மீட்டர் ரேஞ்சை அளிக்கக் கூடிய லித்தியம் - அயர்ன் - பாஸ்பேட் பேட்டரி உடன் ஒப்பிடுகையில், Qilin பேட்டரி 255 கிலோ மீட்டர் குறைந்த எடையை கொண்டிருக்குமாம். 2.6 டன் எடையிலான நடுத்தர - பெரிய செடான் கார் மாடலானது, இந்த பேட்டரியை பயன்படுத்தினால் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகமானது வெறும் 0.6 நொடிகளில் எட்டுமாம். 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது ப்ரேக் அடித்தால் வெறும் 1.44 மீட்டர் தூரத்திலேயே பூஜ்ஜிய நிலையை எட்டுமாம்.
சேசிஸ் பாகங்களின் ஆயுட்காலம் 40 சதவிகிதத்திற்கு அதிகரிக்கும், டயர்களின் ஆயுட்காலம் 30 சதவிகிதத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் 100 கிலோ மீட்டருக்கான ஆற்றல் நுகர்வு குறைந்தபட்சம் 6 சதவிகிதம் வரை குறையும் ஆகியவை பேட்டரியால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ரேஞ்ச்களுடன் வரும் பேட்டரியானது, ஒரே முறை சார்ஜ் செய்வதில் அதிக தூரம் பயணிக்கும் திறன், குறிப்பாக சார்ஜிங் உள்கட்டமைப்பு குறைவாக உள்ள இடங்களில் பயமின்றி பயணிப்பது, 'ரேஞ்ச் ஆங்க்சைட்டி' எனப்படும் பயண வரம்பு குறித்த கவலையைக் குறைக்கின்றன. மேலும் பொதுமக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகபடுத்தவும் உதவுகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்






















