மேலும் அறிய

Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?

Ather EL E-Scooter: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக, வரும் ஆகஸ்ட் 29ம் தேதி ஏதரின் புதிய மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

Ather EL E-Scooter: இந்திய ஆட்டோமொபைல் ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டரானது ஒரு லட்சம் ரூபாய் என்ற தொடக்க விலையில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.

ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர்:

ஏதர் நிறுவனம் தனது முற்றிலும் புதிய EL ப்ளாட்ஃபார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, முதல் மின்சார ஸ்கூட்டரை ப்ராண்டின் கம்யூனிட்டி தினமாக கொண்டாடப்படும், வரும் ஆகஸ்ட் 29ம் தேதி சந்தைப்படுத்த உள்ளதை உறுதி செய்துள்ளது.  பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உற்பத்தியாளருக்கு இது ஒட்டுமொத்தமாக புதிய மாடல் சார்ந்த தொகுப்பின் ஆரம்பமாக அமைய உள்ளது. காரணம் மிகவும் மலிவான மின்சார ஸ்கூட்டர் பிரிவில் தடம் பதிக்க ஏதர் தீவிரம் காட்டி வருகிறது. விழாக்கால சீசனின் போது இந்த ஸ்கூட்டர் டீலர்ஷிப் நிலைகளை அடைய வாய்ப்புள்ளதாம். 10-இன்ச் முதல் 14-இன்ச் வரையிலான சக்கர அமைப்புகளுக்காகவும் புதிய ப்ளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டுள்ளதால்,  இது ஏதர் நிறுவனத்திற்குப் பல்வேறு விலை வரம்புகளில் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

ஏதரின் மலிவான மின்சார ஸ்கூட்டர் - விலை

ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டரின் தொடக்க விலையானது ரூ.1 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட உள்ளதாம். அதாவது ப்ராண்டின் மலிவான ஸ்கூட்டரான ரிஸ்டாவை காட்டிலும் கீழே, புதிய மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளது. ரிஸ்டாவின் தொடக்க விலை ரூ.1.14 (எக்ஸ் - ஷோரூம்) லட்சம் ஆகும். இதுநாள் வரையில் இந்த பெங்களூரு நிறுவனமானது ப்ரீமியம் மின்சார ஸ்கூட்டர்கள் மீதே அதிக கவனம் செலுத்தி வந்தது. இதனால், பெரிய அளவிலான வாய்ப்புள்ள மலிவு விலை சந்தையில் போட்டி நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அந்த நிலையை புதிய EL ப்ளாட்ஃபார்ம் மூலம் மாற்ற ஏதர் திட்டமிட்டுள்ளது.

ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - போட்டியாளர்கள்

ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டரானது உள்ளூரில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் மற்றும் ஆர்பிட்டர், பஜாஜ் சேடக், ஓலா எஸ்1 எக்ஸ் உள்ளிட்டவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளக் கூடுமென கூறப்படுகிறது. உற்பத்திக்கு தயாரான எடிஷனின் ஸ்கூட்டரானது அவ்வப்போது சாலை பரிசோதனைகளிலும் சிக்கியுள்ளது. இதனிடையே, EL ப்ளாட்ஃபார்மின் முதல் மாடலானது கடந்த ஆண்டு நடைபெற்ற ஏதர் கம்யூனிட்டி டேவில் காட்சிப்படுத்தப்பட்டதை போலவே உள்ளது. அதில் இருந்த பெரும்பாலான அம்சங்கள் அப்படியே உற்பத்தி எடிஷனுக்கும் கடத்தப்பட்டு இருப்பதை, பதிவு ஆவணங்கள் உறுதிசெய்கின்றன.

இதையும் படியுங்கள்: Cheapest Strong Hybrid: நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - 28KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்

ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - டிசைன்

முன்பக்கத்தில் அகலமான ஏப்ரான், ஹேண்டில் பாரில் பொருத்தப்பட்ட செவ்வக வடிவிலான எல்இடி முகப்பு விளக்குகள், ஃப்ளாட்டான ஒற்றை இருக்கை மற்றும் விசாலமான இடவசதி கொண்ட ஃப்ளோர் போர்ட் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன. இருக்கைக்கு கீழே இரண்டு ஹெல்மெட்களை வைக்கும் அளவிற்கு காலியிடம் இருக்குமென கான்செப்டில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வசதியானது லக்கேஜ்களை கையாளவதற்கான நோக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை சோதனையின் அடிப்படையில் கிடைத்த தகவல்களின்படி, இந்த ஸ்கூட்டர் 14-இன்ச் முன்பக்க சக்கரம், 12-இன்ச் பின்பக்க சக்கரம், முன்பக்க டிஸ்க் ப்ரேக் மற்றும் பின்பக்க டிரம் ப்ரேக் அமைப்புடன் இயங்குகிறது.

Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?

ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - வசதிகள்

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இதில் அண்மைக்கால ஏதர்ஸ்டாக் சாஃப்ட்வேர், ஸ்மார்ட்போன் கனெக்ட், நேவிகேஷன் மற்றும் பலவிதமான ரைட் மோட்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், போட்டித்தன்மை வாய்ந்த விலையைத் தக்கவைப்பதற்காக, குறைந்த விலை வேரியண்ட்டுகளில் எளிமையான டிஸ்ப்ளே இடம்பெறக்கூடும். மலிவு விலையில் வாகனத்தை சந்தைப்படுத்துவதற்காக வழக்கமான பெல்ட் ட்ரிவன் சிஸ்டத்திற்கு பதிலாக ஹப்பில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாரைப் பயன்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - ரேஞ்ச்

ஏதரின் புதிய ஸ்கூட்டரில் 2 kWh முதல் 5 kWh வரையிலான பேட்டரி திறன்களைப் பொருத்த முடியும் என கூறப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 முதல் 105 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமாம். இருக்கைக்குக் கீழே ஒருங்கிணைக்கப்பட்ட, காப்புரிமை பெற்ற ஏசி-டிசி சார்ஜிங் மாட்யூலையும் ஏதர் காட்சிப்படுத்தியிருந்தது. இது, சார்ஜிங் கேபிளை ஸ்கூட்டருக்கு உள்ளேயே சேமித்து வைக்க உதவுகிறது. வாகனத்தின் தோற்றத்தை மேலும் மேம்படுத்தி காட்டவும் உதவுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
TVS Bike Price Hike: டிவிஎஸ் பைக் வாங்க போறீங்களா?.. சத்தம் இல்லாமல் உயர்ந்த விலை.. எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

Embed widget