நவம்பர் 2023க்கான பிராண்ட் வாரியான கார் விற்பனை புள்ளிவிவரங்கள் வெளியாகிவிட்டன. சிறந்த செயல்திறன் கொண்ட பிராண்டுகள் மற்றும் அவற்றின் நிலைகளின் அடிப்படையில் எதுவும் மாறவில்லை என்றாலும், அக்டோபர் மாதத்திற்குப் பிந்தைய விற்பனையின் விபரங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கார் பிராண்ட் மற்றும் கார்கள் என தனித்தனியாக பிரிக்கபபட்டுள்ளது. இதில் அதிகம் விற்பனையான பிராண்ட்களின் தரவரிசையில் மாருதி சுஸுகி முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து முறையே ஹூண்டாய் மற்றும் டாடா அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. முந்தைய மாதத்தில் விற்பனையாகும் முதல் 10 கார் பிராண்டுகள் ஒவ்வொன்றும் மாதந்தோறும் (MoM) தேவை இழப்பை சந்தித்துள்ளன, அதே நேரத்தில் Kia, Skoda மற்றும் Volkswagen ஆகியவை ஆண்டுக்கு ஆண்டு (YoY) விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. நவம்பர் 2023க்கான முதல் 10 சிறந்த விற்பனையான கார் பிராண்டுகளுக்கான பிராண்ட் வாரியான விற்பனை குறித்த அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பிராண்டுகள் |
நவம்பர் 2023 |
அக்டோபர் 2023 |
MoM வளர்ச்சி (%) |
நவம்பர் 2022 |
ஆண்டு வளர்ச்சி (%) |
மாருதி சுசுகி |
1,34,158 |
1,68,047 |
-20.2% |
1,32,395 |
1.3% |
ஹூண்டாய் |
49,451 |
55,128 |
-10.3% |
48,002 |
3% |
டாடா |
46,070 |
48,343 |
-4.7% |
46,040 |
0.1% |
மஹிந்திரா |
39,981 |
43,708 |
-8.5% |
30,233 |
32.2% |
கியா |
22,762 |
24,351 |
-6.5% |
24,025 |
-5.3% |
டொயோட்டா |
16,924 |
20,542 |
-17.6% |
11,765 |
43.9% |
ஹோண்டா |
8,730 |
9,400 |
-7.1% |
7,051 |
23.8% |
எம்.ஜி |
4,154 |
5,108 |
-18.7% |
4,079 |
1.8% |
ஸ்கோடா |
3,783 |
4,566 |
-17.1% |
4,433 |
-14.7% |
வோக்ஸ்வேகன் |
3,095 |
4,089 |
-24.3% |
3,570 |
-13.3% |