Best 4 Scooters: ஆக்டிவா முதல் சுசுகி அஸஸ் வரை.. டாப் கிளாஸ் ஸ்கூட்டர்கள் - விலை, மைலேஜ் எப்படி?
இந்தியாவில் சாலை பயன்பாட்டிற்கு மிகவும் உகந்த 4 ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை, மைலேஜ் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் சாலைகளில் கார்கள், பைக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் ஓட்டுவதற்கு பலரின் தேர்வாக இருப்பது ஸ்கூட்டர் ஆகும். பெண்கள், ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஓட்டும் வகையில் ஸ்கூட்டர் உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த 4 ஸ்கூட்டர் என்னவென்று காணலாம்?
1. Honda Activa 6G:

ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த ஆக்டிவா. ஸ்கூட்டர் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது ஆக்டிவாவே ஆகும். 60 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் வாகனம் இது. ஆக்டிவா Honda Activa 6G STD, Honda Activa 6G DLX, Honda Activa 110 மற்றும் Honda Activa 6G H-Smart ஆகிய 4 வேரியண்ட்கள் உள்ளது. 109.51 சிசி திறன் கொண்டது இந்த ஆக்டிவா 6ஜி. ரூபாய் 85 ஆயிரத்து 344 இதன் தொடக்கவிலை. நகரங்களிலும், கிராமங்களிலும் ஓட்டுவதற்கு இந்த வாகனம் ஏற்ற வாகனம் ஆகும்.
2. TVS Jupiter:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் இந்த ஜுபிடர். இது லிட்டருக்கு 55 கி,மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. டிவிஎஸ் ஜுபிடர் 110, டிவிஎஸ் ஜுபிடர் 125 ஆகியவை வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வண்டியின் தரம், பிக்கப் போன்றவற்றிற்காக இந்த ஸ்கூட்டர் அனைவராலும் விரும்பப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 83 ஆயிரம் முதல் தொடங்குகிறது. 113.3 சிசி திறன கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ட்யூப்லஸ் டயர்ஸ் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. 33 லிட்டர் டிக்கி வசதி உள்ளது.
3. Hero Pleasure+

ஹீரோ நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்றாக ப்ளசர் ப்ளஸ் உள்ளது. எடை குறைவாக அதே நேரத்தில் பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக இந்த வாகனம் உள்ளது. பெண்கள் மிக எளிதாக கையாளும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 70 ஆயிரம் ( எக்ஸ் ஷோரூம்) ஆகும். ப்ளூடூத் இணைத்துக் கொள்ளும் வகையில் டேஷ்போர்ட் உள்ளது. 110 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ளது. 55 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 8.70 என்எம் டார்க் திறன் கொண்டது.
4. Suzuki Access 125:
சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் இந்த சுசுகி அஸ்ஸஸ் ஆகும். நல்ல பிக் அப், நல்ல மைலேஜ் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ள சுசுகி அஸஸ் 50 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. தற்போதுள்ள இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுசுகி அஸஸ் சார்ஜிங் வசதியுடன் உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 90 ஆயிரம் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதியுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி உள்ளது.

தரம், மைலேஜ், பிக் அப் ஆகியவற்றை மனதில் வைத்தும், தேசிய நெடுஞ்சாலைகளிலும், நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் ஓட்டுவதற்கு ஏற்ற வாகனமாக மேலே கூறிய இந்த 4 ஸ்கூட்டர்கள் உள்ளது. இதில் உங்களுக்கு ஏற்ற வாகனத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், இந்த வாகனங்களுக்கு அவ்வப்போது தள்ளுபடியும் அறிவிப்பது வழக்கம் ஆகும்.





















